சூர்யா தற்போது 'இறுதிச்சுற்று' பட இயக்குநர் சுதா கொங்காரா இயக்கத்தில் 'சூரரைப்போற்று' படத்தில் நடிக்கிறார். சூர்யாவின் 38வது படமாக உருவாகும் இந்தப் படத்திற்கு ஜி.வி.பிரகாஷ் இசையமைக்கிறார். இப்படம் ஜி.வி.பிரகாஷ் இசையில் உருவாகும் 70வது படமாகும். சூர்யாவின் '2டி எண்டர்டெயின்மெண்ட்' நிறுவனம் இப்படத்தைத் தயாரிக்கிறது.
இந்தப் படம் வரலாற்றுப் படம் என்று செய்திகள் வெளியாயின. அதற்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக அண்மைய பேட்டியில் "'சூரரைப்போற்று' வரலாற்றுப் படம் என்று செய்திகள் பரவி வருகின்றன. ஆனால் இது உண்மையல்ல. இருப்பினும் இப்படத்தில் கேப்டன் ஜி.ஆர்.கோபிநாத்தின் வாழ்க்கையில் நிகழ்ந்த சில சுவாரஸ்யமான நிகழ்வுகளை மையப்படுத்தி கதை உருவாக்கப்பட்டுள்ளது," என்று விளக்கினார் சூர்யா.

