சுடச் சுடச் செய்திகள்

ராஜமௌலி இயக்கத்தில் சாய் பல்லவி

தமிழில் ‘என்ஜிகே’ படத்தில் நடித்து முடித்த கையோடு மேலும் சில படங்களில் ஒப்பந்தமாகி உள்ளார் சாய் பல்லவி. அந்த வகையில் அடுத்து ராஜமௌலி இயக்கும் படத்தில் நடிக்க உள்ளாராம். 

பிரிட்டன் அரசுக்கு எதிராக ஆந்திராவில் பல்வேறு போராட்டங்களில் ஈடுபட்ட இரு சுதந்திரப் போராட்ட வீரர்களின் கதையைத் திரைப்படமாக உருவாக்குகிறார் ராஜமௌலி. 

இப்படத்துக்கு ‘ஆர்ஆர்ஆர்’ என்று தலைப்பிட்டு உள்ளனர். ரூ.300 கோடி செலவில் படம் உருவாகி வருகிறது. இதில் ஜூனியர் என்டிஆர், ஆலியா பட், அஜய் தேவ்கன், சமுத்திரகனி, பிரியாமணி உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர். 

இங்கிலாந்தைச் சேர்ந்த டெய்சி எட்கர் ஜோன்ஸ் என்ற நடிகையும் ஒப்பந்தமானார். எனினும் திடீரென இப்படத்திலிருந்து அவர் விலகி விட்டார். இதையடுத்து டெய்சியின் கதாபாத்திரத்தில் சாய் பல்லவி நடித்தால் நன்றாக இருக்கும் என நினைத்தாராம் ராஜமௌலி. 

இதையடுத்து, அவரிடம் பேச்சுவார்த்தை தொடங்கியுள்ளது. ராஜமௌலி படம் என்பதால் சாய் பல்லவியும் அதிகம் யோசிக்காமல் தேதிகளை ஒதுக்கி இருப்பதாகக் கூறப்படுகிறது.

 

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு $4.90 மட்டுமே!
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை வாசிக்க... >>
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon