மொழி தெரிவது அவசியம் - பூர்ணா

மொழிக் கொள்கை தொடர்பாக தமிழகத்தில் கொந்தளிப்பான சூழ்நிலை நிலவும் நிலையில் எந்த மொழியில் நடித்தாலும் அந்த மொழியை நன்கு கற்றுத் தேர்ந்த பிறகே நடிக்க வேண்டும் என்பதே தமது கொள்கை என்கிறார் நடிகை பூர்ணா.

தமிழில் இடைவெளிவிட்டே படங்களில் நடித்துக் கொண்டிருப்பவர், தற்போது தெலுங்கு, கன்னடத்திலும் கவனம் செலுத்தி வருகிறார். கன்னடத்தில் இவர் நடித்துள்ள ‘சொர்ண சுந்தரி’ படம் நல்ல திருப்புமுனையாக அமையும் என நம்புகிறாராம்.

“தமிழிலும் தெலுங்கிலும் நடிக்கும்போது எனக்கு எந்தச் சிரமமும் ஏற்படுவதில்லை. ஏனெனில் இரு மொழிகளும் எனக்கு அத்துப்படி. ஆனால், கதை, எனது கதாபாத்திரத்தின் தன்மை, பேசும் வசனங்கள் என அனைத்தையும் புரிந்துகொண்டு நடிக்கிறேன்.

“என்னைப் பொறுத்தவரை ஒரு மொழியைப் புரிந்துகொண்டு நடிக்கும்போது நம்மையும் அறியாமலேயே கதையிலும் கதாபாத்திரத்திலும் ஒருவித ஈடுபாடு ஏற்படுகிறது. அதனால் வழக்கத்தைவிட மேலும் சிறப்பாக நமது நடிப்புத் திறமையை வெளிப்படுத்த முடிகிறது.

“தொடக்கத்தில் தெலுங்கிலும் சற்றே தடுமாறி னேன். ஆனால் போகப்போக அம்மொழியைக் கற்றுத் தெளிந்து கச்சிதமான நடிப்பை வழங்க முடிந்தது என்று சொல்பவர், கன்னட மொழியில் பேசி நடிப்பது இன்னும் சரிவர கைகூடிவர வில்லை,” என்கிறார்.

கன்னட மொழியைக் கற்பது கடினமாக இருக்கிறதாம். எனினும் தன் முயற்சியைக் கைவிடாது தொடர்கிறார். இந்தி மொழியும் இவருக்குத் தகராறுதானாம். சிறு வயதில் பள்ளிக்கூடத்தில் இந்தியை இரண்டாவது விருப்பப் பாடமாகப் பயின்றுள்ளார் பூர்ணா. நான்காம் வகுப்பு வரை தட்டுத்தடுமாறித்தான் இந்தி மொழித் தேர்வில் தேர்ச்சி பெறுவாராம்.

“அதன் பிறகு என்னால் தொடர்ந்து இந்தி படிக்க முடியவில்லை. வேறு வழியின்றி எனது விருப்ப மொழியை ஆங்கிலம் என்று மாற்றிய மைத்தனர். அதனால் தப்பித்தேன். இந்தளவு இந்தி எனக்கு அந்நிய மொழியாகவே உள்ளது. எனினும் அதையும் கற்றுத் தேர்ந்து இந்தியில் நடிக்க வேண்டும் எனும் ஆர்வம் உள்ளது. ‘சொர்ண சுந்தரி’ படம் கன்னடத்தில் மட்டுமல்லாமல் தெலுங்கிலும் தயாராகி வருகிறது. தமிழில் மொழிமாற்றம் செய்து வெளியிடும் திட்டம் உள்ளதாம்.

“இந்தப் படம் தமிழ் ரசிகர்களை யும் கவரும் என உறுதியாக நம்பு கிறேன். கணினி தொழில் நுட்பப் பணிகள் காரணமாக படம் வெளியீடு காண இரு ஆண்டுகள் ஆகிவிட்டன. எனினும் மிகச் சிறப்பான படைப்பாக உருவாகி இருக் கிறது. இந்தப் படத்தின் படப்பிடிப்பு நடந்தபோது சுவாரசியமான பல விஷ யங்கள் அரங்கேறின. அவை அனைத்துமே இனிமையான அனுப வங்கள்,” என்கிறார் பூர்ணா.

தமிழில் தாம் நடித்த சில படங்கள் வெற்றி பெற வில்லை என்பது வருத்தம் தருவதாகச் சொல்கிறார்.

“அவையனைத்தும் நல்ல கதையம்சம் உள்ள படங்கள் என்ப தால்தான் இந்த வருத்தம் ஏற்படுகிறது. இனியாவது அந்த நிலைமை மாறும் என நினைக்கிறேன்,” என்கிறார் பூர்ணா.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!