ஜெயம் ரவி நடிப்பில் உருவாகியுள்ள 'கோமாளி' ஜூன் 28ஆம் தேதி திரைக்கு வரவுள்ளதாக வெளியான தகவலில் உண்மை இல்லை என அந்தப் படத்தின் தயாரிப்புத் தரப்பு தெரிவித்துள்ளது.
இப்போதுதான் படத்தின் சுவரொட்டி களையே வெளியிடத் தொடங்கியுள் ளோம் என்று படத்தின் இயக்குநர் பிரதீப் ரங்கநாதன் கூறியுள்ளார்.
'அடங்க மறு' படத்தைத் தொடர்ந்து புதுமுக இயக்குநர் பிரதீப் ரங்கநாதன் இயக்கத்தில் ஜெயம் ரவி நடித்துள்ள படம் இது.
காஜல் அகர்வால், சம்யுக்தா ஹெக்டே, பாலிவுட் நடிகை கவிதா ராதேஷ்யாம், கே.எஸ்.ரவிக்குமார், யோகிபாபு ஆகியோர் முக்கியக் கதா பாத்திரங்களில் நடித்துள்ளனர்.
ரிச்சர்ட் எம். நாதன் ஒளிப்பதிவு செய்துள்ள இந்தப் படத்துக்கு, ஹிப் ஹாப் தமிழா ஆதி இசையமைத்து இருக்கிறார்ர். வேல்ஸ் ஃபிலிம் இன்டர் நேஷனல் சார்பில் ஐசரி கணேஷ் தயாரித்துள்ளார்.
படப்பிடிப்பு இன்னும் முழுமையாக முடிவடையாத நிலையில், இப்படம் ஜூன் 28ஆம் தேதி வெளியாக இருப் பதாக அண்மையில் இணையத்தில் தகவல் பரவியது. இதையடுத்து விளக்கம் அளித்துள்ளார் பிரதீப் ரங்கநாதன்.
"கண்டிப்பாக அக்குறிப்பிட்ட தேதி யில் வெளியீடு கிடையாது. இப்போது தான் சுவரொட்டிகளை வெளியிடத் தொடங்கி உள்ளோம். எனவே சில நாட்களாகும்," என்று அவர் தெரிவித் துள்ளார்.
பள்ளிக்கூடங்களை கதைக்கள மாகக் கொண்டு இந்தப் படம் உருவாக் கப்பட்டுள்ளதாம்.
தமது கதாபாத்திரத்திற்காக 20 கிலோ எடையைக் குறைத்துள்ளார் ஜெயம் ரவி. மேலும் இந்தப் படத் திற்காக அவர் மெனக்கெட்டு தரமான நடிப்பை வழங்கி இருப்பதாகப் பாராட்டுகிறார் இயக்குநர்.
ஜெயம் ரவி நடித்துள்ள 24வது படம் இது. அவரது 25வது படத்தை லட்சுமணனும் 26வது படத்தை அஹமதுவும் இயக்க உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

