மீண்டும் இந்திப் படத்தில் தனுஷ்

மீண்டும் இந்திப் படத்தில் தனுஷ்

1 mins read
56ac314e-50af-4f86-b675-5af410cfb86e
-

'ராஞ்சனா', 'ஷமிதாப்' ஆகிய படங்களைத் தொடர்ந்து மீண்டும் ஒரு இந்திப் படத்தில் நடிக்கிறார் தனுஷ். இம்முறை ஆனந்த் எல். ராய் இயக்கத்தில் அவர் நடிக்க இருப்பதாகத் தகவல்.

தற்போது வெற்றிமாறன் இயக் கத்தில் 'அசுரன்,' படத்திலும் துரை செந்தில்குமார் இயக்கத்தில் மற் றொரு படத்திலும் நடித்து வருகிறார் தனுஷ். இரண்டிலுமே தந்தை, மகன் என இரட்டை வேடங்களை ஏற்றுள்ளார். அடுத்து 'ராட்சசன்' படத்தில் ராம்குமார் இயக்கத்தில் நடிக்க உள்ளாராம்.

இம்மூன்று படங்களையும் முடித்த பிறகே அவரது இந்திப் படத்தின் படப்பிடிப்பு துவங்கும் எனத் தெரிகிறது.

இதற்கிடையே தனுஷ் நடித்துள்ள ஹாலிவுட் படம் 'பக்கிரி' என்ற பெயரில் வரும் 21ஆம் தேதி தமிழில் வெளியாகிறது. நான்கு ஆண்டுக ளுக்குப் பிறகு இந்தியில் நடிக்க ஒப்புக்கொண்டுள்ளார் தனுஷ்.