கள்ளன்- வேட்டைக்கார இளைஞனின் கதை

கள்ளன்- வேட்டைக்கார இளைஞனின் கதை

2 mins read
493afdb5-8d4d-44f8-98ad-b231723d272c
'கள்ளன்' படத்தில் கரு. பழனியப்பன், நிகிதா. -
Google News Preferred Icon

எழுத்தாளர் சந்திரா இயக்கத்தில் உருவாகி உள்ள படம் 'கள்ளன்'. இயக்குநர் கரு. பழனியப்பன் நாய கனாக நடித்துள்ளார்.

இயக்குநர்கள் அமீர், ராம் ஆகி யோரிடம் சினிமா குறித்துப் பயின் றவர் சந்திரா. இவரது படைப்புகள் பல பிரபல பத்திரிகைகளில் இடம் பெற்றுள்ளன. தனது படத்துக் ன கதை, கதாபாத்திர வடிவமைப்பை எழுதி முடித்தபோதே கதையின் மீது பெரிய நம்பிக்கை ஏற்பட்டதாக சொல்கிறார் சந்திரா.

"யதார்த்த சினிமாவுக்கு எப் போதுமே ரசிகர்கள் மத்தியில் பெரிய வரவேற்பு கிடைக்கும். 'கள்ளன்' அப்படிப்பட்ட ஒரு பட மாகவே உருவாகி உள்ளது. எனது கதையை முழுமையாக உள் வாங்கிக்கொண்டதுடன் தனது கதாபாத்திரத்துக்காக கடுமையாக உடற்பயிற்சி செய்து தம்மைத் தயார்படுத்திக்கொண்டார் கரு. பழனியப்பன். படத்தின் சூழ்நிலை, பருவநிலைக்கு ஏற்ப தன்னைத் தயார் செய்துகொண்டார்.

"மேலும் இந்தக் கதைக்காக நான் மேற்கொண்ட ஆராய்ச்சியைத் தொடர்ந்து அவரும் கூடுதல் முயற்சிகளை முன்னெடுத்தார்," என்கிறார் சந்திரா.

இப்படத்தில் நாயகியாக அறிமு கமாகிறார் நிகிதா. முக்கிய பாத் திரங்களில் வேல. ராமமூர்த்தி, சண்டைப் பயிற்சியாளர் தினேஷ் சுப்பராயன், சௌந்தரராஜா உள் ளிட்டோர் நடித்துள்ளனர்.

தேனி அருகே கிராமத்தில் வசிக்கும் ஒருவனுக்கு தனது வாழ்வாதாரத்துக்காக வேட்டை ஆடுவதைத் தவிர வேறொன்றும் தெரியாது. இந்நிலையில் அரசாங் கம் வேட்டையாடுவதற்குத் தடை விதிக்கிறது.

"இந்த உத்தரவு அவனது வாழ்க்கையை எப்படியெல்லாம் வேட்டையாடுகிறது என்றும், அவ னது வாழ்க்கையில் எத்தகைய சூறாவளி வீசுகிறது என்பதையும் இப்படத்தில் விவரித்துள்ளோம்," என்கிறார் இயக்குநர் சந்திரா.