கொள்கை ஏதுமில்லை - நந்திதா ஸ்வேதா

சிறிய இடைவேளைக்குப் பிறகு ‘தேவி 2’, ‘செவன்’ ஆகிய படங்கள் மூலமாக தமிழ் ரசிகர்களைச் சந்திக்க வந்துள்ளார் நடிகை நந்திதா ஸ்வேதா. 

கடந்த 2018ஆம் ஆண்டு 11 படங்களில் நடித்து முடித்துள்ளாராம். அது மிகவும் ராசியான ஆண்டு என்று குறிப்பிடுகிறார். 

இன்ன மாதிரி கதைகள், கதாபாத்திரங் களில்தான் நடிக்க வேண்டும் என்று கொள்கை எதுவும் வகுத்துக்கொள்ள வில்லை நந்திதா. அதிலெல்லாம் தமக்கு நம்பிக்கை இல்லை என்கிறார்.

“ரசிகர்களால் விரும்பப்படும் எந்தவொரு படைப்பும் வெற்றி பெறுகின்றன. அதில் நடித்தவர்கள் இயல்பாக புகழ் பெறுகிறார்கள். அவ்வளவுதான் சூட்சமம். என்னைப் பொறுத்தவரை நடிகையான பிறகு ஒரு விஷயத்தில் மட்டும் தெளிவாக, உறுதியாக இருக்கிறேன். 

“அது ஏற்கெனவே நடித்த கதாபாத் திரத்தில் மீண்டும் நடிக்கக்கூடாது என்பதுதான். ‘அட்டகத்தி’ தொடங்கி இதுவரை நான் நடித்துள்ள படங்களைப் பார்த்தால் இந்த உண்மை புரியும். 

‘அட்டகத்தி’க்குப் பிறகு ஒரே மாதிரியான கதாபாத்திரங்கள் தேடிவந்த போது சுதாரித்துக்கொண்டேன். இப்போது ஒவ்வொரு படத்திலும் வித்தியாசமான நந்திதாவைப் பார்க்க முடியும்.”

‘எதிர்நீச்சல்’, ‘அசுரவதம்’ உள்ளிட்ட படங்களில் மிக வித்தியாசமான வேடங் களை ஏற்றிருந்தீர்கள். இதுபோன்ற கதா பாத்திரங்கள் ரசிகர்களின் கவனத்தை ஈர்ப்பதாகக் கருதுகிறீர்களா?

“அப்படிக் கருதவில்லை. ரசிகர்கள் எனது வேடத்தை மட்டும் கவனித்துப் பார்த்துப் பாராட்ட வேண்டும் எனும் எதிர் பார்ப்பு எனக்கு இருந்ததில்லை. அவர்கள் இயல்பாகத் திரையரங்குக்கு வந்து படம் பார்க்கும்போது என் நடிப்பு அவர்களைக் கவர்ந்தால் அதுவே போதுமானது. 

“எனது நடிப்பு அவர்களுக்கு மகிழ்ச்சி தருகிறது எனில், அதைவிடச் சிறந்த பரிசு இருக்கமுடியாது. எனவே ஒரு படத்தை ஒப்புக்கொள்ளும் முன்பே எனக்கான எதிர் பார்ப்புகளை வகுத்துக் கொள்வதில்லை,” என்கிறார் நந்திதா.

தமிழில் ஏன் இடைவெளி ஏற்பட்டது?

“ஒரு படத்தில் நடித்து முடித்த பிறகு அது வெளியீடு காண குறைந்தது ஐந்து மாதங்களாகும். இந்தக் கால அவகாசத்தைப் பயன்படுத்தி பிற மொழிகளில் நடிக்கிறேன். 

“சில சமயங்களில் தமிழ் அல்லது தெலுங்கில் ஒரே சமயத்தில் நான் நடித்த இரு படங்கள் வெளியாகக்கூடும். கடந்த ஆண்டு ஏழு தெலுங்குப் படங்களில் நடித்ததால் தமிழில் நடிக்க நேரமே இல்லை. ‘தேவி,’ ‘செவன்’ ஆகிய இரண்டுமே தமிழ், தெலுங்கு என இரு மொழிகளில் தயாரான  படங்கள். அதனால் வசதியாகிப் போனது. இந்தாண்டு தமிழில் கூடுதல் கவனம் செலுத்துவேன்.” 

பொதுவாக தாம் ஏற்கும் கதாபாத்தி ரங்களுக்கு ஏற்ப தன்னையே மாற்றிக்கொள் வாராம் நந்திதா. படப்பிடிப்பு முடிந்து வீடு திரும்பியபின் நீ நீயாகவே இல்லை என்று அவரது தாயார் சொல்வாராம்.

“படப்பிடிப்பு முடிந்த பிறகு நான் ஏற்ற குறிப்பிட்ட கதாபாத்திரம் என் மனதை முழுமையாக ஆக்கிர மித்திருக்கும். அப்படிக் கதாபாத் திரத்தை உணர்ந்து அதுவாகவே மாறி நடிப்பது நிச்சயம் பாராட்டுகளைப் பெற்றுத் தரும்,” என்கிறார் நந்திதா.

தமிழில் நீங்கள் நடித்த ‘நெஞ்சம் மறப்பதில்லை’, ‘இடம் பொருள் ஏவல்’ ஆகிய படங்கள் இன்னும் வெளியாகவில்லையே?

“நிச்சயம் வருத்தமாக உள் ளது. இந்தப் படங்கள் விரைவில் வெளியாக வேண்டும் எனக் கடவுளிடம் வேண்  டாத நாளில்லை. ‘நெஞ்சம் மறப்ப தில்லை’ படத்தில் நடித்தபோது பெற்ற பயிற்சி தான் தெலுங்கில் சாதிக்க உறு துணையாக உள் ளது. இயக்குநர் செல்வராகவன் எல்லா கலைஞர் களிடமும் அந் தளவுக்கு வேலை வாங்குவார். மீண்டும் அவர் படத்தில் நடிக்க வேண்டும் என விரும்புகிறேன்.

“தற்போது தமிழ், தெலுங்கு, கன்னடம் ஆகிய மூன்று மொழிகளிலும் இரவு பகலாக நடித்துக்கொண்டி ருக்கிறேன். 

“செய்யும் வேலையை வெகுவாக ரசிப்பதால் சோர் வென்பது அறவே இல்லை,” என்று உற்சாகமாகப் பேசும் நந்திதா, ‘ஐ.பி.சி.376’ என்ற தமிழ்ப் படத்தில் காவல்துறை அதிகாரியாக நடித்து வருகிறாராம். 

தெலுங்கில் உருவாகும் ‘கல்கி’ படத்தில் இஸ்லாமிய பெண்ணாகப் படம் முழுவ தும் முகம் காட்டாமல் பெரும் பாலும் கண்களை மட்டுமே காண்பித்து நடித்துள்ளாராம். இந்தப் படத்துக்காக விருது கிடைக்கும் என்று படக் குழுவினர் வெகுவாகப் பாராட்டியதால் மேலும் உற்சாக மடைந்துள்ளார்.

 

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு $4.90 மட்டுமே!
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை வாசிக்க... >>
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon