வயது வித்தியாசம் பற்றி மனம் திறந்து பேசிய நடிகை பிரியங்கா சோப்ரா

‘பாலிவுட்’டிலும் ‘ஹாலிவுட்’டிலும் தமது கவர்ச்சியான நடிப்புத் திறனால் பல ரசிகர்களை வென்ற 36 வயது பிரியங்கா சோப்ரா, இசைக்கலைஞரான தமது கணவர் நிக் ஜோனஸை விட 10 வயது மூத்தவர். திருமணமாகி ஆறு மாதங்கள் ஆன நிலையில், அவர்கள் இருவருக்கிடையே உள்ள வயது வித்தியாசம் குறித்து மக்கள் அடிக்கடி விமர்சித்துள்ளதாக அவர் கூறினார். சென்ற டிசம்பர் மாதத்தில் திருமணம் முடித்த இந்தத் தம்பதியர், அதே ஆண்டின் முற்பகுதியில்தான் தங்களது காதலைப் பொதுத் தளத்தில் வெளிப்படுத்தியதால் அவர்களின் காதல் உண்மையானதல்ல என்ற விமர்சனத்திற்கும் அவர்கள் ஆளானார்கள்.

நிக் ஜோனஸின் சகோதரர் ஜோவும் அவருடைய தற்போதைய மனைவியான சோஃபி டர்னரும் சமூக ஊடகங்களில் அந்தத் தம்பதியைப் பாதுகாக்க “சீற்றத்துடன்” முயன்றபோதிலும், முட்டாள்தனமான விமர்சனங்களுக்கு முக்கியத்துவம் கொடுக்க மறுத்த பிரியங்கா மௌனம் சாதித்தார்.“முட்டாள்தனமான சிலவற்றுக்குப் பதிலளிப்பது அவற்றுக்கு முக்கியத்துவம் அளிப்பதாகிவிடும். நிறைய பேருக்கு அந்தச் சிந்தனை முறை புரிவதில்லை. இது குறுகியகாலக் கண்ணோட்டத்துடன் சிந்திக்கப்பட்ட ஒரு விஷயம் அல்ல. இது ஒரு நீண்ட காலத் திட்டம்,” என்றார் அவர்.

இதற்கிடையில், தமது திருமணம் சார்ந்தவற்றை சமூக ஊடகங்களில் பகிர்ந்துகொண்ட பிரியங்காவைக் கடுமையாக விமர்சித்தவர்களுக்குப் பதிலடி கொடுத்த பிரியங்கா, தாம் பிரபலமாக இல்லாவிட்டாலும் 26 வயது நிக்-கின் புகைப்படங்களைப் பகிர்ந்துகொள்வார் எனக் குறிப்பிட்டார்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!