முப்பரிமாணத்தில் கலக்க வரும் பேய்ப்படம்

முப்பரிமாணத்தில் கலக்க வரும் பேய்ப்படம்

1 mins read
0b637f2f-146c-445f-815a-60976995dd86
-

நடிகர் சந்தானம் நடிப்பில் கடந்த 2016ஆம் ஆண்டு வெளியான 'தில்லுக்குத் துட்டு' படம் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்று வெற்றிப்படம் ஆனது. அதனைத் தொடர்ந்து இப்படத்தின் இரண்டாம் பாகம் இந்த ஆண்டு பிப்ரவரி 7ஆம் தேதி வெளியாகி கலவையான விமர்சனங்களையும் நல்ல வசூலையும் பெற்றது.

சந்தானம் கதாநாயகனாக நடிக்கத் தொடங்கிய பின்னர் அவருக்குக் கைகொடுத்த ஒரு சில படங்களில் 'தில்லுக்குத் துட்டு' படமும் ஒன்று. இந்நிலையில் இதன் அடுத்த பாகமான 'தில்லுக்குத் துட்டு 3' படத்தை முப்பரிமாணத்தில் எடுக்க நடிகர் சந்தானம் முடிவு எடுத்துள்ளதாகக் கூறப்படுகிறது.

சந்தானம் இப்போது யோகி பாபுவுடன் இணைந்து 'டகால்டி' என்ற படத்தில் நடித்து வருகிறார். இந்தப் படத்தின் தயாரிப்பாளரான சௌத்ரியே 'தில்லுக்குத் துட்டு 3' படத்தையும் தயாரிக்க இருப்பதாகக் கூறப்படுகிறது.