சாய் பல்லவி: 'ஆர்ஆர்ஆர்' படத்தில் நான் நடிக்கவில்லை

சாய் பல்லவி: 'ஆர்ஆர்ஆர்' படத்தில் நான் நடிக்கவில்லை

1 mins read
8f23514a-73fc-484c-97e0-b44f0f6f8a8e
-

'பாகுபலி 2' படத்தை அடுத்து ராஜமௌலி இயக்கி வரும் மற்றொரு பிரம்மாண்ட படம் 'ஆர்ஆர்ஆர்'. இந்தப் படத்தில் ஜூனியர் என்டிஆர், ராம் சரண் நாயகர்களாக நடிக்கிறார்கள். சுதந்திரப் போராட்ட காலத்து கதையில் உருவாகும இந்தப் படத்தில் அலியா பட், அஜய் தேவ்கன், சமுத்திரகனி ஆகியோரும் முக்கிய வேடங்களில் நடிக்கிறார்கள்.

ஜூனியர் என்டிஆருக்கு ஜோடியாக ஒப்பந்தமாகியிருந்த பிரிட்டன் நடிகை எட்கர் ஜோன்ஸ், திடீரென்று விலகியதால் அவருக்குப் பதிலாக மாற்று நாயகியைத் தேடி வந்தனர். இவர் வேடத்தில் நடிகை சாய் பல்லவி நடிக்க இருப்பதாகக் கூறப்பட்டது. ஆனால் இதை சாய் பல்லவி மறுத்துள்ளார்.

இந்நிலையில், ஒரு பேட்டியில் சாய் பல்லவி, "ஆர்ஆர்ஆர் படத்தின் இயக்குநர் ராஜமௌலி அல்லது அப்படக்குழுவைச் சேர்ந்த யாரும் இந்தப் படத்தில் நடிக்க இதுவரை என்னை அணுகவில்லை. தவறான செய்தியைப் பரப்ப வேண்டாம்," எனத் தெரிவித் துள்ளார்.

இந்நிலையில், தற்போது தெலுங்கில் ராணா வுடன் ஒரு படத்தில் அவர் ஒப்பந்தமாகியிருக் கிறார். போராளிகள் பற்றிய கதையில் உருவாகும் அப்படத்தில் இளம் போராளியாக சாய்பல்லவி நடிக்கிறார்.

கூடவே இப்படத்தில் அவருக்குச் சண்டைக் காட்சிகளும் இருப்பதாகக் கூறப்படுகிறது. அதனால் ராணாவுடன் நடிக்கும் இந்தப் படம், சாய் பல்லவியை முன்னணிக்குக் கொண்டு செல்லும் படமாக இருக்கும் என்று கூறப்படுகிறது.