நகைச்சுவை நடிகர் யோகி பாபு நாயகனாக நடித்திருக்கும் 'கூர்கா', 'தர்மபிரபு' ஆகிய இரண்டு படங் களும் வெளிவரத் தயாராக இருக் கின்றன. அதனால் இரட்டிப்பு மகிழ்ச்சியில் இருக்கிறார் யோகி பாபு.
இவர், தான் திரைத்துறைக்கு வருவதற்கு முன்பு தான் பட்ட கஷ்டங்களை அண்மையில் ஒரு பேட்டியில் கூறுகையில், "வீட்டில் சண்டைப் போட்டுக்கொண்டு வீட்டைவிட்டு வெளியே வந்தேன். பல நாட்கள் வீதியிலேயே கழித்தேன்.
"நான் ராணுவத்தில் சேர முயற்சி செய்தேன். ஆனால் வாய்ப்பு கிடைக்கவில்லை. அப்படி இப்படி என்று கஷ்டப்பட்டு பல நாட்கள் அலைந்து திரிந்தேன். இறுதியாக என்னிடம் இருந்த 200 ரூபாயுடன் பூந்தமல்லி பேருந்து நிலையத்தில் ஒருநாள் முழுவதும் உட்கார்ந்து இருந்தேன். என்ன செய்வது என்று தெரியாமல் அந்த 200 ரூபாயை எடுத்துக்கொண்டு திருத்தணி மலைக்குச் சென்று கடவுளை வேண்டிவிட்டு எங்கு செல்வது என்று தெரியாமல் அங்கேயே படுத்திருந்தேன்.
"பின்னர்தான் இந்த வாய்ப்புகள் வந்தன. நான் நம்பிய கடவுள் என்னைக் கைவிடவில்லை. 'லொல்லு சபா' படப்பிடிப்பைப் பார்க்க அந்த இடத்திற்குச் சென்றேன். அங்கு என்னுடைய முடியைப் பார்த்ததும் வித்தியாசமாக இருக்கிறது என்று நடிக்க அழைத்தார்கள். அங்கு இருந்து தான் என்னுடைய திரை வாழ்க்கை ஆரம்பித்தது," என்று நெகிழ்ச்சியுடன் கூறினார் யோகிபாபு.
தற்பொழுது திரையில் நகைச்சுவையில் இவரை மிஞ்ச யாரும் இல்லை என்று கூறும் அளவிற்கு முன்னணியில் இருக்கிறார்.
இவர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் 'கூர்கா', 'தர்மபிரபு' படங்கள் வெளியாகத் தயாராக இருக்கின்றன.
இதில் 'கூர்கா' படம் இம்மாதம் 28ஆம் வெளியாக இருக்கிறது. இந்தப் படத்தை எலீசா, ஆனந்தராஜ், லிவிங்ஸ்டன், பிரதீப் ராவத் உட்பட பலர் நடித்துள்ளனர். ராஜ் ஆர்யன் இசை அமைத்துள்ளார்.
கிருஷ்ணன் வசந்த் ஒளிப்பதிவு செய்துள்ளார். 'டார்லிங்', 'எனக்கு இன்னொரு பேர் இருக்கு', '100' படங்களை இயக்கிய சாம் ஆண்டன் இந்தப் படத்தை இயக்கியுள்ளார். படத்தை 'லிப்ரா புரொடக்ஷன்' நிறுவனம் வாங்கி வெளியிடுகிறது. "விரைவில் அதிகமான திரையரங்குகளில் படம் வெளியிடப்படும்" என்றார் 'லிப்ரா புரொடக்ஷன்' தயாரிப்பாளர் ரவீந்தர் சந்திரசேகரன்.
'தர்ம பிரபு' படமும் விரைவில் வெளியாக இருக்கிறது. 'கூர்கா', 'தர்ம பிரபு' ஆகிய இரண்டு படங்கள் அடுத்தடுத்து வருவதால் ஏதோ ஒரு படம் பாதிக்கப்பட வாய்ப்பிருப்பதாகப் பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
ஆனால், சம்பந்தப்பட்ட படங்களின் தயாரிப்பாளர்களோ தங்களுடைய படம்தான் முதலில் வெளியாக வேண்டும் என்று பிடிவாதம் பிடிக்கின்றனர்.
இந்நிலையில், சற்குணம் இயக்கத்தில் விமல், ஓவியா ஆகியோர் நடித்திருக்கும் 'களவாணி 2' படமும் யோகி பாபு நடித்திருக்கும் 'தர்ம பிரபு' படமும் ஒரேநாளில் வெளியாக இருக் கின்றன. அதனால் 'களவாணி 2' படத் திற்கு அதிக திரையரங் குகள் கிடைக்காது என்ற கவலையில் இருக்கிறார் கள் 'களவாணி' படக் குழுவினர்.
எது எப்படியோ தான் நடித்திருக்கும் இரண்டு படங்களும் திரைகாண இருப்பதில் இரட்டிப்பு மகிழ்ச்சியில் இருக்கிறார் நடிகர் யோகி பாபு.

