மீண்டும் பேயுடன் போராடும் அனுஷ்கா

மீண்டும் பேயுடன் போராடும் அனுஷ்கா

1 mins read
16c5126a-9a45-4f63-a879-a53d0d575b20
-

'அருந்ததி'யில் தொடங்கி 'பாகமதி' வரை பல பேய்ப்படங்களில் நடித்தவர் அனுஷ்கா. தற்போது 'சைலன்ஸ்', 'சைரா நரசிம்ம ரெட்டி' ஆகிய படங்களில் நடித்து வருகிறார். இந்தப் படங்களைத் தொடர்ந்து ஸ்பானிஷ் மொழியில் வெளியான 'ஜூலியாஸ் ஐ' என்ற படத்தின் மறுபதிப்பில் நடிக்க இருப்பதாகத் தகவல் வெளியாகி உள்ளது.

இந்தப் படமும் பேய் சம்பந்தப்பட்ட கதையாக உருவாகிறது. அந்த வகையில் இந்தப் படம் முழுவதும் பேயுடன் போராடும் கதாபாத்திரத்தில் நடிக்க இருக்கிறார் அனுஷ்கா. தமிழ், தெலுங்கில் தயாராகும் இந்தப் படத்தைக் கபீர்லால் என்பவர் இயக்க இருக்கிறார்.