சுடச் சுடச் செய்திகள்

மூன்று கதாபாத்திரங்களில் ராய் லட்சுமி

‘சின்ட்ரல்லா’ என்ற தலைப்பில் தயாராகும் புதிய படத்தில் மூன்று வித்தியாசமான கதாபாத்திரங்களில் நடித்து வருகிறார் ராய் லட்சுமி. இந்தப் படம் வெளிவந்ததும் தமிழ், தெலுங்கு, கன்னடம் ஆகிய மும்மொழிகளிலும் தனது மதிப்பு உச்சம் தொடும் என்று வெகுவாக நம்புகிறாராம். 

“சின்ட்ரல்லா கதாபாத்திரத்தை மையப்படுத்தி ஒரு வேடத்திலும் ராக் இசை கலைஞராகவும் நடிக்கிறேன். மூன்றாவது கதாபாத்திரம் என்ன என்பது குறித்து விவரம் தெரிவிக்க இயலாது. அது சஸ்பென்ஸ்,” என்கிறார் ராய் லட்சுமி. 

இப்படத்தில் கல்லூரி வினோத், சாக்‌ஷி அகர்வால் உள்ளிட்ட பலர் முக்கிய வேடங்களை ஏற்கின்றனர். முதற்கட்ட படப்பிடிப்பு முடிவுக்கு வந்துள்ளன. அடுத்தகட்ட படப்பிடிப்பு இம்மாத இறுதியில் தொடங்க உள்ளது.

“சிறிய இடைவெளிக்குப் பிறகு மீண்டும் ஒரு திகில், பேய் சம்பந்தப்பட்ட கதையில் நடிக்க உள்ளேன். இனி அனைத்து மொழிகளிலும் கவனம் செலுத்துவது என தீர்மானித்துள்ளேன்,” என்கிறார் ராய் லட்சுமி.

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு $4.90 மட்டுமே!
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை வாசிக்க... >>
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon