'சங்கத்தமிழன்' படத்தில் நிவேதா

'சங்கத்தமிழன்' படத்தில் நிவேதா

1 mins read
f5d25019-ed32-4b6b-90dd-16298fe038c1
-
Google News Preferred Icon

தமிழில் நல்ல கதைகளாகத் தேர்ந்தெடுத்து நடித்து வரும் நிவேதா பெத்துராஜ் தெலுங்கிலும் தீவிர கவனம் செலுத்தி வருகிறார். இந்த மெனக்கெடலுக்கு நல்ல பலன் கிடைத்துள்ளதாம்.

ஏற்கெனவே 'மென்டல் மதிலோ', 'சித்திரலகரி' ஆகிய படங்கள் மூலமாக தெலுங்கு ரசிகர்கள் மத்தியில் நன்கு அறிமுகமாகி உள்ளார் நிவேதா.

இந்நிலையில் அல்லு அர்ஜுன் நாயகனாக நடிக்கும் புதிய படத்தில் ஒப்பந்தமாகி உள்ளார். திரி விக்ரம் இயக்கும் இப்படத்தில் பூஜா ஹெக்டேதான் கதாநாயகி. அவருக்கு இணையான கதாபாத்திரத்தில் நடிக்கிறார் நிவேதா.

"தமிழில் இப்போது விஜய் சேதுபதியுடன் 'சங்கத் தமிழன்', 'ஜெகஜால கில்லாடி' ஆகிய படங்களில் நடிக்கிறேன். இவை தவிர வேறு படங்கள் ஏதுமில்லை. எனவே நல்ல கதையுள்ள இயக்குநர்கள் என்னை அணுகலாம்.

"அதேசமயம் கால்‌ஷீட்டை வீணடிப்பவர்களுடன் இணைந்து செயல்பட எனக்கு விருப்பமில்லை. ஏனெனில் இவ்விஷயத்தில் தவறு செய்யாதவர்கள் மீதும் குற்றம்சாட்டப்படுகிறது. இதை என்னால் ஏற்க இயலாது," என்கிறார் நிவேதா.