அரவிந்த்சாமி வித்தியாசமான நடிப்பை வழங்கும் படம் 'கள்ளபார்ட்'

அரவிந்த்சாமி வித்தியாசமான நடிப்பை வழங்கும் படம் 'கள்ளபார்ட்'

1 mins read
37219ec1-1559-43e3-98e5-9f515078c58b
அரவிந்த்சாமி, ரெஜினா -

அரவிந்த்சாமி, ரெஜினா ஜோடி சேர்ந்து நடிக்கும் படம் 'கள்ளபார்ட்'. 'என்னமோ நடக்குது', 'அச்சமின்றி' ஆகிய படங்களை இயக்கிய ராஜபாண்டி இந்தப் படத்தை இயக்குகிறார். ஆனந்த்ராஜ் முக்கிய வேடத்தில் நடிக்க ஒப்பந்தமாகி உள்ளார். மற்ற கலைஞர்களும் ரசிகர்களுக்கு நன்கு அறிமுகமானவர்களாம்.

பட வெளியீடு குறித்து அதிகாரபூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என படக்குழுவினர் தெரிவித்துள்ளனர். "இப்படம் வித்தியாசமான கதையம்சம் கொண்டது. விறுவிறுப்பான திரைக்கதையை அமைத்துள்ளோம். சென்னையில் அரங்குகள் அமைத்து படப்பிடிப்பு வேகமாக நடைபெற்று வருகிறது. நிவாஸ் கே.பிரசன்னா இசையில் உருவாகும் பாடல்கள் ரசிகர்களைக் கவரும் என நம்புகிறோம். வழக்கம் போல் இந்தப் படத்திலும் அரவிந்த்சாமியின் நடிப்பு வித்தியாசமாக இருக்கும்," என்கிறார் இயக்குநர் ராஜபாண்டி.