வைரல் ஆகும் ரஜினி பேரனின் புகைப்படம்

வைரல் ஆகும் ரஜினி பேரனின் புகைப்படம்

1 mins read
7a52f1d7-8a3e-4366-bde4-04a5e9e8c2cc
படங்கள்: சந்தோஷ் சிவன் டுவிட்டர். -

இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் உருவாகி வரும் 'தர்பார்' படப்பிடிப்பில், ரஜினிகாந்த் அவரின் பேரன் தேவ் கிருஷ்ணாவைத் தூக்கிக் கொண்டு காட்சியளிக்கும் புகைப்படம் ஒன்றை ஒளிப்பதிவாளர் சந்தோஷ் சிவன் தமது ஃபேஸ்புக், டுவிட்டர் பக்கங்களில் நேற்று பதிவிட்டார்.

ரஜினிகாந்தின் இளைய மகள் சவுந்தர்யாவின் மகன் தேவ் கிருஷ்ணா.

ஒளிப்பதிவாளர் சந்தோ‌ஷின் பதிவைத் தொடர்ந்து சவுந்தர்யாவும் அவரின் டுவிட்டர் பக்கத்தில் அந்த படத்தைப் பகிர்ந்தார்.

அப்பாவி முகம் கொண்ட அவரின் பேரனைக் கையில் ஏந்திக்கொண்டு மலர்ந்த புன்னகையுடன் ரஜினி காட்சி தரும் இந்த படம், இணையத்தில் பரவலாக பகிரப்பட்டு வருகிறது.

'பேட்ட' படத்தைத் தொடர்ந்து ரஜினிகாந்த் நடிக்கும் 'தர்பார்' முதல்கட்ட படப்பிடிப்பு நிறைவடைந்த நிலையில் உள்ளது. இந்த திரைப்படத்தில் ரஜினிக்கு ஜோடியாக நயன்தாரா நடிக்கிறார்.

நயந்தாரா உட்பட யோகி பாபு, நிவேதா தாமஸ், சுனில் ஷெட்டி, தலீப் தஹில், ப்ரதீக் பாப்பர் ஆகியோரும் நடித்து வருகின்றனர்.

ஜூன் மாத இறுதியில் அடுத்தகட்ட படப்பிடிப்பு மும்பையில் நடைபெறும்.

இப்படத்திற்கு இசையமைப்பாளர் அனிருத் இசை அமைக்கிறார். அடுத்த ஆண்டு பொங்கலை முன்னிட்டு இந்த படம் வெளியிடப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.