சண்டைக் காணொளியை வெளியிட்ட தன்‌ஷிகா

சண்டைக் காணொளியை வெளியிட்ட தன்‌ஷிகா

1 mins read
5de6fb14-0d9d-47f6-aefb-2a42b370febc
சாய் தன்‌ஷிகா. -

அண்மைக்காலமாக நடிகர் களுக்கு சவால் விடுவதுபோல் நடிகைகளும் தாங்கள் நடிக்கும் ஆபத்தான சண்டைக் காட்சி களில் 'டூப்' போடாமல் தாங்களே நடிக்கும் வழக்கம் ஏற்பட்டுள்ளது.

இந்த கோதாவில் முதலில் குதித்தது வரலட்சுமி. இவர் அண்மையில் மலேசியாவில் 'சேஸிங்' என்ற படத்தில் தான் நடித்த சண்டைக் காட்சியை காணொளியாக வெளியிட்டு அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தினார்.

அவரைத் தொடர்ந்து சாய் தன்‌ஷிகாவும் தான் நடிக்கும் படத்தில் தன்னுடைய சண்டைக் காட்சியை காணொளியாக எடுத்து வெளியிட்டுள்ளார்.

இவர் ரஜினியின் மகளாக நடித்த 'கபாலி' படத்திலேயே 'டூப்' பயன்படுத்தாமல் சண் டைக் காட்சியில் நடித்திருந்தார்

அடுத்தபடியாக அவர் நடிக்கும் மற்றொரு படத்திலும் சண்டைக் காட்சிகளில் 'டூப்' பயன்படுத்தாமல் நடிக்கப் போகிறாராம் சாய் தன்‌ஷிகா. இவருக்குச் சிலம்பாட்ட கலையும் அத்துப்படி. மேலும் சில தற்காப்புக் கலைகளும் பயின்று இருக்கிறார் சாய் தன்‌ஷிகா.