மருமகனைப் பாராட்டும் மாமியார்

‘அடங்கமறு’ படத்தை இயக்கிய ஜெயம் ரவியின் மாமியார் சுஜாதா விஜயகுமார் தன்னுடைய மருமகன் ஜெயம் ரவியின் ஈடுபாடு, பங்களிப்புக் குறித்து பெருமையாகக் கூறியிருக்கிறார்.

ஜெயம் ரவி, ரா‌ஷி கண்ணா நடித்திருந்த படம் ‘அடங்கமறு’.  இந்தப் படம் ஜெயம் ரவிக்கு வெற்றிப் படமாக அமைந்தது. அந்தப் படத்தைத் தயாரித்த சுஜாதா விஜயகுமார் கூறுகையில், “ஜெயம் ரவி தயாரிப்பாளர்களுக்கு ஒரு ‘பாதுகாப்பான பந்தம்’. அவரது திறமையான நடிப்பையும் அவர் கதைகளைத் தேர்வு செய்வதையும் மட்டும் சொல்லவில்லை. அவர் தன்னுடைய தயாரிப்பாளர்களுக்குக் கொடுக்கும் மரியாதையும் முக்கியக் காரணம். 

“அவர் ஒரு தயாரிப்பாளர் குடும்பத்தைச் சேர்ந்தவர் என்பதால்  அவர் எப்போதும் தயாரிப்பாளர்களை முதல் இடத்திலும் இயக்குநர்களை அடுத்த இடத்திலும் வைத்து மதிக்கிறார். 

“அடங்க மறு’ அவரது திரை வாழ்க்கையில் மிகவும் தனித்துவமான திரைப்படங்களில் ஒன்றாக இருந்தது. அவருடைய அர்ப்பணிப்புக்கு நான் மிகுந்த கடமைப்பட்டு இருக்கிறேன்,” என்று பெருமையாகக் கூறினார்.

இந்நிலையில் ஜெயம் ரவி தற்பொழுது நடித்துக் கொண்டு இருக்கும் ‘கோமாளி’ படத்தில் பள்ளி மாணவனைப்போல காட்சியளிக்க 20 கிலோ எடையைக் குறைத்து நடித்துக்கொண்டு இருக்கிறார். படப்பிடிப்பு விரைவில் முடிய இருக்கிறது.

‘ரோமியோ ஜுலியட்’, ‘போகன்’ படங்களுக் குப் பிறகு ஜெயம் ரவி, லட்சுமண் கூட்டணி மீண்டும் ஜெயம் ரவியின் 25வது படத்தில் இணைகின்றனர். இந்தப் படத்தில் ஜெயம் ரவிக்கு ஜோடியாக நிதி அகர்வால் நடிக்க இருக்கிறார். 

ஹைதராபாத்தில் பிறந்து பெங்களூருவில் வளர்ந்து அங்கேயே கல்லூரிப் படிப்பையும் முடித்தவர் நிதி அகர்வால். இந்தி மட்டுமல்லாது, தெலுங்கு, தமிழ், கன்னடம் ஆகிய மொழிகளையும் பேசுகிறார்.

ஜெயம் ரவி நடிக்கும் படங்கள் என்றாலே அழகான, திறமையான கதாநாயகிகளை நடிக்க வைப்பது வழக்கம். அந்த வரிசையில் நிதி அகர்வாலும் திறமையான அழகான பெண்தான். விரைவில் இந்தப்படம் பற்றிய அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இப்பகுதியில் மேலும் செய்திகள்

குழந்தைகள் ரியான், ரஹில் ஆகியோருடன் ஜெனிலியா, ரிதி‌ஷ் டெ‌ஷ்முக் தம்பதியர். படம்: ஊடகம்

20 Sep 2019

ஜெனிலியா: வயது பற்றி கவலையில்லை