தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

காதல் வலையில் சிக்கிய அனுபமா

1 mins read
b68e7f94-1c25-4945-be6e-58ca6aed09ec
அனுபமா பரமேஸ்வரன் -

கிரிக்கெட் வீரர்கள் திரையுலகப் பிரபலங்களைக் காதலிப்பது ஒன்றும் புதிதல்ல. பல கிரிக்கெட் வீரர்கள் நடிகைகளைக் காதலித்து மணந்துள்ளனர்.

அந்தப் பட்டியலில் இந்திய கிரிக்கெட் அணியின் இளம் வேகப்பந்து வீச்சாளரான பும்ராவும் இணைய வாய்ப்புள்ளதாகத் தகவல். இளம் நாயகி அனுபமா பரமேஸ்வரனும் இவரும் காதலிக்கிறார்களாம்.

மலையாளத்தில் பெரியளவில் வெற்றி பெற்ற 'பிரேமம்' படத்தின் மூலம் பிரபலமானவர் அனுபமா. தமிழில் தனு‌ஷுடன் 'கொடி' படத்தில் நடித்திருந்தார்.

பும்ரா தனது சமூக வலைத்தளத்தில் எப்போது, எதை பதிவிட்டாலும் உடனே அதற்குப் பதிலளிக்கிறார் அனுபமா. மேலும் அந்தப் பதிவை விரும்பி, பலருடன் பகிரவும் செய்கிறார்.

பும்ரா டுவிட்டர் தளத்தில் 25 பேரை மட்டுமே பின்தொடர்கிறார். அதில் இடம்பெற்றுள்ள ஒரே நடிகை அனுபமா தான்.

இதனால் இருவரும் காதல் வலையில் விழுந்திருப்பதாக ரசிகர்கள் பதிவிட்டு வருகின்றனர். காதல் குறித்த தகவல் விரைவில் அதிகாரப் பூர்வமாக வெளிவரக் கூடும்.