சண்டை காட்சிகளில் அசத்தும் விக்ராந்த்

சண்டைக் காட்சிகளில் இயல்பாகவும் ஆவேசமாகவும் நடிப்பதாக விக்ராந்த்தை கோடம்பாக்கத்தில் பாராட்டுகிறார்கள். ஆனால் அவரோ சண்டைக் காட்சிகளில் மிகவும் சிரமப்படுவதாகச் சொல்கிறார்.

‘சுட்டுப்பிடிக்க உத்தரவு’ படத்தில் இவருக்கு நிறைய சண்டைக் காட்சிகள் உள்ளனவாம். அவற்றில் எல்லாம் கச்சிதமாக நடித்திருக்கிறார் விக்ராந்த்.

“ரசிகர்களின் பாராட்டு காதில் விழும்போது நாம் பட்ட சிரமங்கள் எல்லாம் பறந்தோடி விடுகிறது. இந்தப் படத்தில் மிகவும் அர்ப்பணிப்புடன் நடித்தேன். பொதுவாக உயரம் என்றால் சற்றே தயங்குவேன். குறிப்பிட்ட உயரத்துக்குச் சென்று விட்டால் மயக்கம் வருவது போல் உணர்வேன்.

“ஆனால் இந்தப் படத்துக்காக எடுக்கப்பட்ட சண்டைக் காட்சிகள் அனைத்துமே உயரமான கட்டடங்களின் உச்சியில்தான் படமாக்கப்பட்டன. எப்படியோ இயக்குநர் எதிர்பார்த்தது போல் நடித்து முடித்ததில் திருப்தி.

“எந்தவொரு சண்டைக் காட்சியாக இருந்தாலும் ரசிகர்கள் திரையை நோக்கி ‘அட்ரா அவன’ என்று சொன்னால் அது நிச்சயம் நல்ல காட்சியாக உருவாகி இருக்கிறது என நம்பலாம்,” என்கிறார் விக்ராந்த்.

ஒரே சமயத்தில் இரு படங்களில் நடிப்பது சிரமமான விஷயம் என்று சொல்பவர், அண்மையில் அத்தகைய அனுபவத்தைப் பெற்றுள்ளார்.

‘சுட்டுப்பிடிக்க உத்தரவு’ படத்துடன் ‘வெண்ணிலா கபடிக்குழு’ இரண்டாம் பாகத்திலும் ஒருசேர நடித்தாராம்.

“கபடி சம்பந்தப்பட்ட கதை என்பதால் நடிக்க வேண்டும் என்கிற ஆர்வம் எனக்கும் இருந்தது. ஆனால் ‘பக்ரீத்’ நடித்துக் கொண்டிருந்த சமயத்தில் என்னை அழைத்தனர்.

“எனது தோற்றத்தை முற்றிலும் மாற்றி அமைக்க வேண்டும் என்பதால் சிரமமாக உணர்ந்தேன். என்னால் நடிக்க இயலாது என்பதை தெரிவிக்க வேண்டும் என்பதற்காகவே இயக்குநர் ராம்பிரகாஷ் ராயப்பாவை சந்திக்கச் சென்றேன்.

“ஆனால் எனக்காக அவர் ஒதுக்கி இருந்த கதாபாத்திரம், அவர் சொன்ன கதை, விவரித்த காட்சிகள் என அனைத்தும் என் வாயைக் கட்டிப் போட்டுவிட்டன. எனவே தயக்கமின்றி ஒப்புக்கொண்டேன்,” என்கிறார் விக்ராந்த்.

நடிகர் விஜய்யின் சகோதரர் என்பது தனக்கு சாதகமான விஷயம் என்று கூறுவது அறவே தவறு என்று குறிப்பிடுபவர், அந்த நிலைமை மாற வேண்டும் என்பதே தமது விருப்பம் என்கிறார்.

“விஜய் அண் ணன் என்னை மட்டுமல்ல, வளரும் நடிகர்கள் அனை வரையும் உற்சாகப் படுத்துவார்.

“அவரது நிழலில் நின்று வாய்ப்பு பெறுவதை நான் விரும்பவில்லை. எனக்கான படங்கள் தன்னால் வர வேண் டும் என்பதே எனது விருப்பம். இதில் மாற் றமில்லை,” என்கிறார் விக்ராந்த்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!