‘பண்ணையாரும் பத்மினியும்’, ‘சேதுபதி’ ஆகிய வெற்றிப் படங்களை தொடர்ந்து விஜய் சேதுபதியும் அருண்குமாரும் இணைந்துள்ள ‘சிந்துபாத்’ வரும் 21ஆம் தேதி வெளியீடு காண உள்ளது. வில்லனாக மிரட்டி இருப்பவர் லிங்கா. தனது கதாபாத்திரத்தின் தேவை அறிந்து 20 கிலோ எடை குறைத்துள்ளார் சேதுபதி.
முக்கியமான காட்சிகளை மலேசியா, தாய்லாந்து, கம்போடியாவில் படமாக்கி உள்ளனர். அஞ்சலி நாயகியாக நடித்துள்ள இப்படத்தில் சண்டைக் காட்சிகள் மிரள வைக்குமாம். “ஒன்பது நிமிடங்கள் வரை நீடிக்கும் இறுதிக்காட்சி ரசிகர்களை வெகுவாகக் கவரும். யுவன்சங்கரின் பின்னணி இசை படத்தை தாங்கிப் பிடிக்கிறது. படத்தின் வெற்றிக்கு இசையும் கைகொடுக்கும்,” என உறுதியளிக்கிறார் இயக்குநர் அருண்குமார்.