மகனை ஏசிய சேதுபதி

விஜய் சேதுபதி, அஞ்சலி இருவரும் முதல் முறையாக ‘சிந்துபாத்’ படத்தில் ஜோடியாக நடித்துள்ளனர். இப்படம் கோடம்பாக்கத்தில் பெரும் எதிர்பார்ப்புகளை ஏற்படுத்தி உள் ளது. இதற்கேற்ப படம் அருமையான படைப்பாக உருவாகி உள்ளது.

மூன்றாவது முறையாக இயக்குநர் அருண்குமாருடன் பயணிக்கும் அனுபவம் குறித்து கேட்டால் அவரைப் புகழ்ந்து தள்ளுகிறார் சேதுபதி.

அது மட்டுமல்ல அருண்குமார் தன் குடும்பத்தில் ஒருவர் என்றும், ஒவ்வொரு படத்தையும் இருவரும் மிகுந்த ரசனையோடு உருவாக்குவதாகவும் சொல்கிறார்.

வேறு கதாநாயகருடன் இணைந்து படம் இயக்குமாறு பலமுறை கூறிவிட் டாராம். ஆனால் அது ஒத்துவராது என அருண்குமார் மீண்டும் தன்னிடமே வந்துவிட்டதாகச் சிரிக்கிறார்.

“நானே கூட சில நாயகர்களிடம் அருண் பற்றி சொல்லி இருக்கிறேன். அருணுடைய திறமை குறித்து விவரித் துள்ளேன். அவரும் போவார், கதை சொல் வார். கடைசியில் எதுவும் நடக்கவில்லை என்று என்னிடமே வருவார். என்னால் எது வும் சொல்ல முடியாமல் போய்விடும்.

“அதனால்தான் இனி யாருக்காகவும் காத்திருக்க வேண்டாம் என முடிவு செய்து, மீண்டும் கூட்டணி அமைத்துள்ளோம். அருணை எனக்கு ரொம்பப் பிடிக்கும். இந்தப் படத்தையும் மிக வித்தியாசமான முறையில் உருவாக்கி உள்ளார்,” என்கிறார் சேதுபதி.

‘சிந்துபாத்’ படத்தில் தன் மகன் சூர்யாவை நடிக்க வைக்க வேண்டும் என சேதுபதி திட்டமிடவில்லையாம். கதை எழுதியபோதே சூர்யாவுக்கென ஒரு கதா பாத்திரத்தை உருவாக்கினாராம் அருண் குமார். 

“குழந்தைகளோட முடிவும் ரசனையும் அவர்களுடையதாக இருக்க வேண்டும் என நினைப்பவன் நான். என் மகன் விஷயத்திலும் இதைப் பின்பற்றினேன். நீயே முடிவு எடுத்துக்கொள் என்று நான் சொன்னபோது, சூர்யாவுக்கு நடிப்பில் ஆர்வமில்லை, வேண்டாம் என்று கூறி விட்டார். பிறகு என்னவோ தெரியவில்லை. நடிப்பதாகச் சொன்னதும் அருணுக்கு மகிழ்ச்சி.”

இந்தப் படத்துக்காக ஏறத்தாழ இரண்டு மாதங்கள் தன் தந்தையுடன் படப்பிடிப்பில் பங்கேற்றுள்ளார் சூர்யா. அந்தச் சமயத் தில் பலமுறை மகனை ஏசியுள்ளாராம் சேதுபதி. அதே சமயம் ஒரு தொழிலில் எப்படி அர்ப்பணிப்புடன் செயல்பட வேண்டும் என்றும், இது எத்தகையதொரு நல்ல வாய்ப்பு என்பதையும் மகனுக்குப் புரிய வைத்தாராம்.

“இதுபோன்ற வாய்ப்புக்காக எத்தனை பேர் காத்துக் கிடக்கிறார்கள் என்பதைச் சொன்னேன். சில சமயங்களில் குறும்பு செய்யும்போது அடிக்கக் கூட போயிருக் கிறேன். 

“இந்தப் படம் வழியே நல்ல அடை யாளம் கிடைத்தால், இந்த உலகம் உனக்கு நல்ல நடிகன் என முத் திரை குத்தும். அந்த இடத்தில் நின்று சிந் திக்க வேண் டும் என்று சொன்னேன். வாழ்க்கையை படிக்கச் சொல்வதே ஒருதகப்பனின் முக்கியமான வேலை என நம்புகிறேன்.

“அந்த வேலையை மிக கச்சிதமாகச் செய்த திருப்தி உள்ளது,” என் கிறார் விஜய் சேதுபதி.

கொசுறு: ‘சங்கத்தமிழன்’ படத்தில் இவரது மகளும் சிறிய வேடத்தில் நடிக்கிறார்.