‘மோகனுக்கு எந்த பிரச்சினையுமில்லை’

தனது சகோதரரும், திரைப்பட வசனகர்த்தாவுமான கிரேசி மோகன் எந்த வகை நோயாலும் மரணம் அடையவில்லை என்றும், இறக்கும் வரை மிக ஆரோக்கியமாகவே இருந்தார் என்றும் அவரது இளைய சகோதரர் மாது பாலாஜி தெரிவித்துள்ளார்.

ஜூன் 10ஆம் தேதி  காலை பத்து மணி வரை கிரேசி மோகன் தனது குடும்பத்தாருடன் தனக்கே உரிய இயல்புடன் கலகலப்பாகப் பேசிக் கொண்டிருந்ததாகக் குறிப்பிட்டுள்ள பாலாஜி, அதன் பிறகே மோகனுக்கு திடீர் மாரடைப்பு ஏற்பட்டதாகக் கூறியுள்ளார்.

“மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்தனர். எனவே அவர்களைக் குறை கூறக்கூடாது. மேலும் என் அண்ணனுக்கு உடலில் வேறு எந்தப் பிரச்சினையும் இல்லை. எனவே அவரை குடும்பத்தார் சரியாகக் கவனிக்கவில்லை என்பன போன்ற வதந்திகளைப் பரப்ப வேண்டாம்,” என மாது பாலாஜி கேட்டுக் கொண்டுள்ளார். மேற்காணும் படத்தில் மோகனுடன் இருப்பவர் மாது பாலாஜி.