சந்தானத்தைப் பாராட்டும் ‘டகால்டி’ இயக்குநர்

‘டகால்டி’ என்ற வித்தியாசமான தலைப்புடன் தயாராகிறது சந்தா னத்தின் அடுத்த படம். இது நகைச்சுவையும் அடிதடியும் கலந்த ஜாலியான படமாம்.

நடிகர் ஜாக்கிசான் படங்களைப் போல் சண்டைக் காட்சிகள் குழந் தைகள் முதல் பெரியவர் வரை அனைவரையும் ரசிக்க வைக்கும் என்றார் இயக்குநர் விஜய் ஆனந்த். இவர் இயக்குநர் சங்கரிடம் உதவி இயக்குநராகப் பணியாற்றியவர்.

“சந்தானத்துக்கு இது புதுக் களமாக இருக்கும். இதற்கு முன் அவர் நடித்த படங்களில் அவரைச் சுற்றி நிறைய கதாபாத்திரங்கள் வழியாகத்தான் கதை அமைந்திருக் கும். இதில் அவரது கதாபாத்திரம் முக்கியமானது. அவரைச் சுற்றியே கதை பின்னப்பட்டிருக்கும். 

“இதில் சந்தானத்தின் கதாபாத் திரத்தின் பெயர் குரு. மும்பையில் வசிக்கும் தமிழராக வருகிறார். 

“சந்தானத்துக்கு என தனி பாணி உள்ளது. அவரது தொழில் பக்தி என்னை வியக்க வைத்தது. கதைக்காக தன்னை அர்ப்பணித் துக்கொள்வார். இயக்குநர் சொல்வதை மட்டுமே செய்வார். நாயகனாக நடிப்பதால் எதையும் திணிக்கச் சொல்லமாட்டார்.

“மனம் விட்டு சரளமாகப் பேசிப் பழகுபவர். எங்கள் இரு வருக்கும் இடையே நல்ல புரிதல் இருந்ததால் படப்பிடிப்பை குறித்த நேரத்தில் முடிக்க முடிந்தது,” என்றார் உற்சாகத்துடன் விஜய் ஆனந்த்.

இப்பகுதியில் மேலும் செய்திகள்

திரைத்துறை மட்டுமல்ல, எல்லாத் துறைகளிலுமே பெண்களுக்குப் பாதுகாப்பின்மை நிலவுவதாகவும் சொல்கிறார் நடிகை நித்யா மேனன். படம்: ஊடகம்

11 Dec 2019

நித்யா மேனன்: எல்லாத்துறைகளிலும் பெண்களுக்குப் பாதுகாப்பு குறைவாக உள்ளது