விஷாலுக்கு வரலட்சுமி எதிர்ப்பு

நடிகர் சங்கத் தேர்தலுக்காக விஷால் கீழ்த்தரமான பிரசாரத்தில் ஈடுபட்டுள்ளதாக நடிகை வரலட்சுமி தெரிவித்துள்ளார்.

தன் தந்தையும் நடிகருமான சரத்குமார் மீது சுமத்தப்பட்ட ஊழல் குற்றச்சாட்டை நிரூபிக்க இயலாத விஷால் மீது, தனக்கிருந்த கொஞ்ச நஞ்ச மரியாதையும் போய்விட்டதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

“நீங்கள் ஒரு புனிதர் போல நடந்து கொள்ள வேண்டாம். உங்க ளது இரட்டை வேடத்தையும் பொய் களையும் அனைவரும் அறிவார்கள். 

“நீங்கள் புனிதர் என்றால் உங்க ளுடைய பாண்டவர் அணியிலிருந்து சிலர் வெளியேறி இன்னொரு அணியை உங்களுக்கு எதிராக உருவாக்கி இருக்க மாட்டார்கள். 

“உங்களுடைய செயலில் பெரு மிதப்படுபவர் என்றால் அதைச் சொல்லி வாக்கு கேட்கலாமே?,” என்று வரலட்சுமி மேலும் கூறி உள்ளார்.