குறைந்த பொருட்செலவில் உருவான ‘ஹவுஸ் ஓனர்’

லட்சுமி ராமகிருஷ்ணன் இயக்கத்தில் உருவாகி உள்ள ‘ஹவுஸ் ஓனர்’ படம் விரைவில் வெளியாக உள்ளது. சென்னை வெள்ளத்தின் பின்னணியில் நடந்த உண்மைச் சம்பவத்தை மையமாக வைத்து கதைக்களத்தை அமைத்துள்ளாராம். ‘பசங்க’ கிஷோர், நடிகை விஜி சந்திரசேகரின் மகள் லவ்லின், கிஷோர் உள்ளிட்டோர் முக்கிய பாத்திரங்களில் நடித்துள்ளனர்.

படத்தில் பணியாற்றிய அனைவரும் குறைவான ஊதியம் பெற்றுக்கொண்டதால் குறைந்த செலவில் இப் படத்தை எடுக்க முடிந்ததாகக் கூறுகிறார் லட்சுமி ராமகிருஷ்ணன்.