நீதிமன்ற உத்தரவு: நடிகை தனுஸ்ரீ கடும் அதிருப்தி

பிரபல இந்தி நடிகர் நானா படே கர் மீதான பாலியல் புகாருக்கு உரிய ஆதாரங்கள் இல்லை என நீதிமன்றம் அளித்த தீர்ப்பு அதிர்ச்சி அளிப்பதாக நடிகை தனுஸ்ரீ தத்தா கூறியுள்ளார்.

படப்பிடிப்பின்போது நானா படேகர் தமக்கு பாலியல் தொல்லை கொடுத்தார் என்பது இவரது புகார். அதைப் பலர் பார்த்ததாகவும் கூறியுள்ளார்.

தனுஸ்ரீ அளித்த புகாரின் பேரில் விசாரணை நடத்திய போலிசார் பாலியல் தொல்லை ஏதுமில்லை என நீதிமன்றத்தில் அறிக்கை தாக்கல் செய்தனர். அதன் பேரில் தற்போது நீதிமன் றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. இந்த உத்தரவால் தனுஸ்ரீ அதிருப்தி அடைந்துள்ளார்.