பிரியா: நல்ல படங்களில் என்னைப் பார்க்க முடியும்

விளம்பரங்கள், தொலைக்காட்சி செய்தி வாசிப்பாளர், சின்னத்திரை தொடர் நாயகி, திரைப்பட கதாநாயகி என ஒவ்வொரு கட்டமாக முன்னேறி வந்துள்ளார் பிரியா பவானி சங்கர். 

எஸ்.ஜே.சூர்யாவுடன் இணைந்து நடித்த ‘மான்ஸ்டர்’ திரைப்படம் விமர் சன, வசூல் ரீதியில் வெற்றி பெற்றுள் ளது. இதையடுத்து பிரியாவை மூன்று புதுப் படங்களில் ஒப்பந்தம் செய்துள்ளனர்.

அதற்காக தேடி வரும் அனைத்து வாய்ப்புகளையும் ஏற்பதில்லை என்றும் படங் களைத் தேர்வு செய்வதில் நிதானப்போக்கை கடைப்பிடிப்ப தாகவும் சொல்கிறார் பிரியா.

இந்நிலையில் அவர் சமூக வலைத்தளத்தில் வெளியிட் டுள்ள அண்மைய புகைப் படங்கள் ரசிகர்கள் மத்தியில் பலத்த வரவேற்பைப் பெற்று இருக்கிறது. 

அதில் உடல் மெலிந்து காட்சிய ளிப்பவர், சிவப்பு நிறத்தில் சேலை கட்டியுள்ளார்.

அதைப் பார்த்த ரசிகர்கள், பிரியா அழகாக இருப்பதாகக் குறிப்பிட்டுள்ளனர். அதே சமயம் அவர் கட்டியிருந்த சேலை, செய்து கொண்டுள்ள ஒப்பனை ஆகியவற்றைக் கண்டு, ஏதோ குறிப்பிட்ட அரசியல் கட்சியில் சேர்ந்து விட்டாரோ என எண்ணத் தோன்றிய தாகவும் சிலர் நகைச்சுவையாகக் குறிப்பிட்டுள்ளனர்.

“ஏழு ஆண்டு

களில் உங்களது வாழ்க்கை அடியோடு மாறிப்போயிருக்கி றதே? இந்த வளர்ச் சியை எதிர்பார்த்தீர் களா?” என்று கேட் டால், தனக்கே உரிய மெல்லிய புன்ன கையை உதிர்த்தபடி பதிலளிக்கிறார் பிரியா.

“உண்மையில் இது பெரிய வளர்ச்சிதான். அதேசமயம் இதைக் கண்டு நான் ஒரேயடியாக பிரமித்து விடவில்லை. வளர்ந்திருக்கிறேன் என்பது மகிழ்ச்சி அளித்தாலும் ஏதோ புதிய உலகத்தில் சஞ்சரிப்பதாக எல்லாம் நினைக்க வில்லை. எனது இந்த வளர்ச்சியை நானே அருகில் இருந்து பார்த்திருக்கிறேன். இது படிப்படியான முன்னேற்றம்.

“அதனால் ஒவ்வொரு கட்டத்திற்கும் முன்னேறியபோது நானும் எங்கள் குடும்பத் தாரும் அமைதியாக அதை ஏற்றுக்கொண்டு, அதற்கேற்ப செயல்பட்டோம் என்பதே சரி. நானும் எனது வீட்டாரும் கொஞ்சம் கூட மாறவில்லை. இன்னமும் பழைய பிரியாவாகவே இருக்கிறேன்,” என்றார்.

எஸ்.ஜே.சூர்யாவுடன் ஜோடி சேர்ந்து நடிக்க வாய்ப்பு தேடி வந்தபோது முதலில் தயங்கினாராம் பிரியா. எனினும் படத்தின் இயக்குநர் கதையையும் இவருக்கான கதா பாத்திரம் குறித்தும் விவரித்த பிறகு மனம் மாறிவிட்டதாகச் சொல்கிறார். 

“எப்போதுமே கதைக்கும் பட நிறுவனத் துக்கும் முக்கியத்துவம் அளிக்கவேண்டும் என்பதே எனது கொள்கை. நல்ல கதைகளில்  படங்களில் மட்டுமே என்னைப் பார்க்க முடியும். 

“எஸ்.ஜே.சூர்யாவின் படங்கள் எப்படி இருக்கும் என்பது அனைவருக்கும் தெரியும். அவருக்கும் பட நாயகிக்கும் இடையேயான உடல்மொழி வித்தியாசமாக இருக்கும். 

“அந்த அளவிற்கு நம்மால் நடிக்க முடியுமா எனும் சந்தேகம் எனக்கு இருந்தது. ஆனால் இயக்குநர் உற்சாகப்படுத்தி நடிக்க வைத்தார்,” என்கிறார் பிரியா.

ஒரே படத்தில் மூன்று கதாநாயகிகள் இருக்கும் கதைகளை எப்படி ஒப்புக் கொள்கிறீர்கள்?

“இதில் தயக்கம் காட்ட என்ன இருக்கி றது? கோடம்பாக்கத்தில் மட்டுமே எத்தனை நாயகர்கள், நாயகிகள் என்றெல்லாம் கணக்கு பார்க்கிறோம். மலையாளம், தெலுங்கு, இந்தி எனப் பிற மொழிகளில் இதையெல்லாம் யாரும் கண்டுகொள்வதில்லை.

“நம்பர் 1, நம்பர் 2 என்பதில் அவர்களுக்கு நம்பிக்கை இல்லை. மலையாளத்தில் கதை தான் எப்போதுமே கதாநாயகன். 

“சின்னத்திரை தொடர்களில் தனி நாயகியாக நடித்துவிட்டு, அந்நிலையில் இருந்து கீழே இறங்கலாமா என்றும் சிலர் கேட்பதுண்டு. சொல்லப்போனால் ‘கடைக் குட்டி சிங்கம்’ படத்தில் நடித்த அனைவருமே நாயகன், நாயகிகள்தான். அவர்களில் நானும் ஒருவள். 

“தோல்விப் படங்களில் நடித்தால் என்னை யாரும் கண்டுகொள்ள மாட்டார்கள். அப்படிப்  பட்ட படங்களில் இதுவரை நான் நடிக்க வில்லை. எனவே எனது கதை, படத் தேர்வு சரியாக இருந்ததாகவே கருதுகிறேன்.

“அடுத்து சில முன்னணி நாயகர்களுடன்  நடிப்பது மகிழ்ச்சி அளிக்கிறது,” என்றார் பிரியா பவானி சங்கர்.