கொரிய திரைப்பட விழாவில் சேதுபதியின் 'சூப்பர் டீலக்ஸ்'

கொரிய திரைப்பட விழாவில் சேதுபதியின் 'சூப்பர் டீலக்ஸ்'

1 mins read
f167cbf9-4e1e-4b78-a2f9-71b8cafa68c9
'சூப்பர் டீலக்ஸ்'   படத்தில் விஜய் சேதுபதி. -

விஜய் சேதுபதி நடிப்பில் வெளி யான 'சூப்பர் டீலக்ஸ்' திரைப்படம் அனைத்துலகப் படவிழாவில் திரையிட தேர்வாகி உள்ளது.

தியாகராஜன் குமாரராஜா இயக்கத்தில் விஜய் சேதுபதி, சமந்தா, பகத் பாசில், ரம்யா கிருஷ்ணன் ஆகியோர் நடித்த இப்படம் கடந்த மார்ச் மாதம் திரைக்கு வந்து ரசிகர்கள் மத்தி யில் வரவேற்பைப் பெற்றது.

விஜய்சேதுபதி ‌ஷில்பா என்ற திருநங்கை கதாபாத்திரத்தில் இதில் நடித்து இருந்தார். அவரது தோற்றத்துக்குப் பாராட்டுகள் குவிந்தன.

எனவே, சூப்பர் டீலக்ஸ் படத்தை இந்தியில் மறுதயாரிப்பு செய்யவும் ஏற்பாடுகள் நடக்கின் றன.

இந்த நிலையில் 'சூப்பர் டீலக்ஸ்' படம் வருகிற 27ஆம் தேதி முதல் ஜூலை 7ஆம் தேதி வரை கொரியாவில் நடைபெற உள்ள அனைத்துலகத் திரைப்பட விழாவில் திரையிடத் தேர்ந் தெடுக்கப்பட்டு உள்ளது.

மேலும் இந்தத் திரைப்பட விழாவில் 'கல்லிபாய்', 'அந்தா துன்' ஆகிய பிற இந்திய மொழி படங்களும் திரையிடப்படுகின்றன.

கனடா நாட்டின் மாண்ட்ரீல் நகரில் ஜூலை 11ஆம் தேதி முதல் ஆகஸ்டு 1ஆம் தேதி வரை நடைபெற உள்ள அனைத்துலக திரைப்பட விழாவில் திரையிடவும் 'சூப்பர் டீலக்ஸ்' படம் ஏற்கெனவே தேர்வு செய்யப்பட்டுள்ளது.

'சூப்பர் டீலக்ஸ்' படத்தில் திருநங்கையாக நடித்த விஜய் சேதுபதி.