விஷால் மீது பாக்யராஜ் அணியினர் புகார்

விஷால் மீது பாக்யராஜ் அணியினர் புகார்

1 mins read
117a2fdd-4078-4b5e-a06d-9c8bb12f6157
பாக்யராஜ், விஷால் -

சென்னை: நடிகர் சங்கத் தலைவர் பதவிக்குப் போட்டியிடும் பாக்யராஜ், அவரது அணி சார்பில் பொதுச்செயலாளர் பத விக்குப் போட்டியிடும் ஐசரி கணேஷ், பொருளாளர் பதவிக் குப் போட்டியிடும் பிரசாந்த் ஆகியோர் நேற்று சென்னையில் நடிகர் சங்கத் தேர்தல் அதிகாரி பத்மநாபனைச் சந்தித்து விஷால் மீது புகார் அளித்தனர்.

பின்னர் பாக்யராஜ் செய்தி யாளர்களிடம் கூறுகையில், "தேர்தல் அதிகாரி மூலம் வெளியாக வேண்டிய தகவல்கள் விஷால் மூலமாக பத்திரிகையில் வருகின்றன. அது எப்படி என்று புரியவில்லை. அதுகுறித்து தேர்தல் அதிகாரியிடம் விளக்கம் பெறுவதற்காக வந்தோம். விஷால் மீது புகார் மனுவும் கொடுத்துள்ளோம்," என்றார்.

ஐசரி கணேஷ் கூறுகையில், "விஷால் 1,100 வாக்குகள் பதிவாகி விட்டன என்று சொன் னதுபோல் செய்திகள் வந்துள் ளன. தேர்தலை விஷால் நடத்து கிறாரா? இல்லை ஓய்வு பெற்ற நீதிபதி பத்மநாபன் நடத்து கிறாரா? என்ற சந்தேகம் எங்க ளுக்கு வந்துவிட்டது. எனவே தான் நேரில் வந்து விளக்கம் பெற்றோம்.

"சத்யா ஸ்டுடியோவில் தேர்தல் நடைபெறுவதாகக் கூறி இருந்தனர். இப்போது அனுமதி கிடைக்கவில்லை என்று கூறு கிறார்கள்.

"தேர்தல் நடக்குமா, நடக் காதா என்று தெரிய வில்லை. வாக்குச் சீட்டு விவ ரங்களை விளம்பரப் பலகையில் ஒட்ட வில்லை. அதற்குள் 1,100 அஞ் சல் வாக்குகள் வந்து விட்டதாக விஷால் சொல்கிறார். தேர்தல் பணிகளில் குளறுபடி நடந் துள்ளது," என்று தெரிவித் துள்ளார்.