இங்கிலாந்து சென்று கிரிக்கெட் போட்டியை ரசித்த நண்பர்கள்

இங்கிலாந்து சென்று கிரிக்கெட் போட்டியை ரசித்த நண்பர்கள்

1 mins read
cc7f8176-71e9-4cca-a547-ca26b7c5cf09
-

உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி இங்கிலாந்தில் நடந்து வருகிறது. மற்ற போட்டிகளைக் காட்டிலும் இந்தியாவும் பாகிஸ்தானும் மோதும் போட்டிக்கு ரசிகர்கள் மத்தியில் கூடுதல் எதிர்பார்ப்பு இருக்கும். அந்த எதிர்பார்ப்பு நேற்று முன்தினம் நடந்த இந்தியா - பாகிஸ்தான் போட்டியிலும் வெளிப்பட்டது.

இந்தப் போட்டியைப் பார்ப்பதற்காக இங்கிலாந்துக்கு ஏகப்பட்ட கிரிக்கெட் ரசிகர்கள் இந்தியாவில் இருந்து சென்றனர். அதில், நடிகர் சிவகார்த்திகேயனும் இசையமைப்பாளர் அனிருத் தும் முக்கியமானவர்கள்.

அவர்கள் போட்டியைக் காண இந்திய அணியின் ஜெர்சி உடையை அணிந்து சென்றனர். மைதானத்தில் இருவரும் சேர்ந்து எடுத்துக்கொண்ட புகைப்படங்களைச் சமூக வலைத்தளங்களில் பதிவிட்டுத் தங்களது மகிழ்ச்சியை வெளிப்படுத்தி இருக்கின்றனர். அன்றையப் போட்டியில் இந்தியா மகத்தான வெற்றி பெற்றது.