சமுதாயக் கருத்துள்ள படத்தில் நடிக்க இருக்கும் சரவணன்

சமுதாயக் கருத்துள்ள படத்தில் நடிக்க இருக்கும் சரவணன்

2 mins read
c259e9f2-5169-4ed2-96a1-90f6cc2844ac
சரவணன். -

தமிழகத்தில் உள்ள பிரபல கடைகளில் ஒன்று சரவணா ஸ்டோர்ஸ். இன்று பல கிளைகளை தமிழகம் முழுவதும் நிறுவி பிரம்மாண்டமாக காட்சி தருகின்றன. அந்தக் கடையின் விளம்பரங்கள்தான் இன்று அனைத்து தொலைக்காட்சி களிலும் ஒளிபரப்பப்பட்டு வருகின்றன.

முக்கியமாக இதில் தோன்றும் சரவணா ஸ்டோர்ஸ் கடையின் சொந்தக்காரர் சரவணன் பிரபல நடிகைகளுடன் ஆடுவது, பாடுவது என மக்களைக் கவரும் அத்தனை அம்சங்களும் உள்ள விளம்பரங்களில் நடித்து அதை ஒளிபரப்புகிறார். ஆரம்பத்தில் அவருடைய நடிப்பைப் பார்த்து பலரும் கிண்டல் செய்தனர். ஆனால் அவர் எதைப்பற்றியும் கவலைப்படுவதாக இல்லை.

ஒரு சமயம் அவர் கூறுகையில், "என்னைப் பற்றி பலரும் கிண்டல் செய்கிறார்கள். என்னுடைய கடைக்கு என்னைவிட வேறு யாரும் அக்கறையுடன் விளம்பரப்படுத்த முடியாது. அதனால் என் கடைக்கு நானே நடித்து விளம்பரப்படுத்துகிறேன். என்னைப் பற்றி யார் எது சொன்னாலும் கவலைப்படமாட்டேன்," என்று கூறியிருந்தார்.

இந்நிலையில் சரவணன் 'அண்ணாச்சி' திரைப்படத்தில் நடிக்க ஆர்வமாக இருப்பதாகக் கூறப்பட்டது. அது தற்பொழுது விஸ்வரூபம் எடுத்து பல கோடி வரவு செலவுத் திட்டத்தில் படம் ஒன்று தயாரிக்க இருக்கிறார். இந்தப் படத்தில் அண்ணாச்சிக்கு ஜோடியாக பிரபல முன்னணி நடிகை ஒருவர் நடிப்பார் என்று தெரிவிக்கப் பட்டுள்ளது.

தான் நடிக்கும் படம் சமுதாயக் கருத்துள்ள மக்களைக் கவரும் விதத்தில் இருக்க வேண்டும் என்றும் அதைப்போன்ற ஒரு கதையை உருவாக்குமாறு பல கதையாசிரி யர்களிடம் கட்டளை பிறப்பித் திருக்கிறார் 'அண்ணாச்சி' என்று அழைக்கப்படும் சரவணன்.