கீர்த்தியை வம்புக்கு இழுத்த ஸ்ரீரெட்டி

கீர்த்தியை வம்புக்கு இழுத்த ஸ்ரீரெட்டி

1 mins read
354e1e1c-2aaa-4599-ab5b-3c249d3876b5
கீர்த்தி சுரேஷ், ஸ்ரீரெட்டி -

யாரேனும் ஒருவரை தொடர்ந்து வம்பிழுத்தபடியே இருக்கிறார் என்று நடிகை ஸ்ரீரெட்டி குறித்து சக கலைஞர்கள் விமர்சிக்கத் துவங்கி உள்ளனர்.

கீர்த்தி சுரேஷ் குறித்து தமது சமூக வலைத்தளப் பக்கத்தில் வெளியிட்ட தகவலே இந்த விமர்சனத்துக்குக் காரணம்.

அண்மையில் இருவரும் ஒரே விமானத்தில் பயணம் செய்தனராம். அப்போது ஒல்லியான தேகத்துடன் இருந்த கீர்த்தியை யாருக்குமே அடை யாளம் தெரியவில்லையாம்.

அதேசமயம் பயணிகளில் சிலர் ஸ்ரீரெட்டியுடன் செல்ஃபி எடுத்துக் கொண்டனராம்.

"எனக்கும் கூட கீர்த்தியை அடையாளம் கண்டுகொள்ள முடியவில்லை. உடல் எடையைக் குறைத்ததற்குப் பின்னர் கீர்த்தி சுரேஷ் நோயாளி போல் இருக்கிறார். அவர் நடித்த 'மகாநதி' படம் இயக்குனரால்தான் சிறப்பாக உருவானது. மாறாக, கீர்த்தி சுரே‌ஷின் திறமையால் அல்ல. தற்போது சாய் பல்லவி மிகவும் சிறப்பாக நடித்து வளர்ந்து வருகிறார்," என்று கூறியுள்ளார் ஸ்ரீரெட்டி. இதற்கு கீர்த்தி பதிலடி கொடுப்பாரா அல்லது தவிர்ப்பாரா என்பது தெரியவில்லை.