விஜய் மில்டன் இயக்கத்தில் நடிக்கிறார் விஜய் ஆண்டனி

விஜய் மில்டன் இயக்கத்தில் நடிக்கிறார் விஜய் ஆண்டனி

1 mins read
8924734b-dd19-4c11-aaa5-a7de0eba3232
விஜய் ஆன்டணி, கோப்புப்படம் -

விஜய் ஆண்டனி நடிக்கும் புதிய படத்தை விஜய் மில்டன் இயக்குகிறார். இதற்கான அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியாகி உள்ளது. அடிப்படையில் ஒளிப்பதிவாளரான விஜய் மில்டன் இப்படத்தின் திரைக் கதையை எழுதி இயக்குவதோடு, ஒளிப்பதிவும் செய்கிறார்.

படத்தில் பணிபுரிய முன்னணி நடிகர்கள் மற்றும் தொழில்நுட்பக் கலைஞர்களுடன் பேச்சுவார்த்தை நடந்துவருகிறதாம். அக்டோபரில் படப்பிடிப்பைத் துவங்கி ஒரே கட்டமாக அனைத்துக் காட்சிகளையும் படமாக்க உள்ளனர்.