நடிகர் சங்கத் தேர்தலை நிறுத்தும்படி உத்தரவு

நடிகர் சங்கத் தேர்தலை நிறுத்தும்படி உத்தரவு

1 mins read
425f209f-ea4f-482e-b4cf-1585ce1f2e89
விஷால் -

சென்னை: தென்னிந்திய நடிகர் சங்க நிர்வாகிகள் பதவிக்கான தேர்தல் இம்மாதம் 23ஆம் தேதி நடைபெற இருந்த நிலையில் இந்தத் தேர்தலை நிறுத்துமாறு தென்சென்னை மாவட்டப் பதி வாளர் உத்தரவு பிறப்பித்துள்ளார்.

அனைத்துப் பிரச்சினைக ளுக்கும் தீர்வு காணும்வரை தேர்தல் குறித்த நடவடிக்கைகளை நிறுத்தி வைக்குமாறு தென் சென்னை மாவட்ட சங்கங்களின் பதிவாளர் உத்தரவிட்டுள்ளார்.

அடையாறில் உள்ள எம்ஜி ஆர்-ஜானகி மகளிர் கல்லூரியில் நடைபெற இருந்த இந்த தேர்த லில் நடிகர் நாசர் தலைமையில் பாண்டவர் அணியும் நடிகர் பாக்யராஜ் தலைமையில் சுவாமி சங்கரதாஸ் அணியும் போட்டி யிட இருந்தன.

இந்நிலையில் தேர்தலை நடத்த உயர் நீதிமன்றம் அனுமதி மறுத்துள்ளது.

இதற்கிடையே பாண்டவர் அணியின் விஷால், கருணாஸ், பூச்சி முருகன் ஆகியோர் ஆளு நர் மாளிகையில் பன்வாரிலால் புரோகித்தை சந்தித்து பேசினர்.

"தேர்தல் நியாயமான முறை யில் பாதுகாப்புடன் நடக்கவேண்டும் என ஆளுநரிடம் கோரிக்கை விடுத்துள்ளோம்," என்று பின்னர் விஷால் கூறினார்.