சென்னை: தங்கம் போன்ற தண்ணீரை சிக்கனமாக செலவு செய்யுங்கள் என்று மக்களுக்கு அறிவுறுத்தி உள்ள பின்ன ணிப் பாடகர் எஸ்பி பாலசுப்பிர மணியம், அரை வாளி தண் ணீருக்காகத் தான் அரை மணி நேரம் காத்திருந்ததாக வேதனையுடன் கூறியுள்ளார்.
சென்னையில் நடைபெற்ற 'கூர்கா' படத்தின் ஆடியோ விழாவில் பங்கேற்ற பாடகர் எஸ்.பி.பாலசுப்பிரமணியம் படக்குழுவினருக்கு வாழ்த்து சொல்லிவிட்டு பேசுகையில், "மனிதன் குரங்கில் இருந்து வந்தவன். ஆனால் குரங்குகள் தங்களது கடமையைச் சரி யாகச் செய்துவரும் நிலையில் மனிதன்தான் செய்வதில்லை.
"குறிப்பாக தண்ணீரை சரியான முறையில் சேமித்து வைக்காததால் இன்றைக்குக் குடிதண்ணீர் இல்லாமல் அவதிப்படுகிறோம்.
இந்நிகழ்ச்சிக்கு நான் வரு வதற்கு முன்பு அரை வாளி நீருக்காக அரை மணி நேரம் காத்துக்கொண்டிருந்தேன். இங்கு வந்துள்ள பலருக்கும் தண்ணீர் கொடுத்துள்ளார்கள். ஆனால் அதை யாரும் வீணடித்து விடாதீர்கள்.
அதோடு வீட்டில் தட்டில் சாப்பிடுவதற்குப் பதில் இலையில் சாப்பிடலாம். தினமும் ஓர் ஆடை அணிவதற்கு பதில் வாரம் இரண்டு என அணிந்தால் துணி துவைப்பதற்கான தண்ணீர் செலவு குறையும். அடுத்த தலைமுறைக்கு நாம் சேர்த்து வைக்க வேண்டிய சொத்து என்றால் அது இந்த தண்ணீர்தான். அதனால் அனை வரும் தண்ணீரைச் சேமித்து வைத்துச் சிக்கனமாக செலவு செய்யுங்கள்," என்றார்.

