குறித்த தேதியில் வெளியீடு காண்கிறது தனு‌ஷின் 'பக்கிரி'

குறித்த தேதியில் வெளியீடு காண்கிறது தனு‌ஷின் 'பக்கிரி'

1 mins read
1cf7aa2b-7f86-4454-82e6-7ca0afc3c38b
தி எக்ஸ்ட்ரா ஆர்டினரி ஆஃப் தி ஃபகிர் -

நடிகர் தனுஷ் நடிப்பில் வெளியான 'தி எக்ஸ்ட்ரா ஆர்டினரி ஆஃப் தி ஃபகிர்' என்ற ஆங்கிலத் திரைப்படம் உலகின் பல நாடுகளில் வெளியாகி நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது. இப்படம் தமிழில் மொழிமாற்றம் செய்யப்பட்டு 'பக்கிரி' என்ற பெயரில் நாளை வெளிவர இருக்கிறது.

தொடக்கத்தில் தமிழ்ப் பதிப்புக்கு 'வாழ்க்கையைத் தேடி நானும் போறேன்' என்றுதான் தலைப்பு வைத்தார்களாம். எனினும் பிறகு அதை மாற்றிவிட்டனர். இப்படத்தை கென் ஸ்காட் இயக்கியுள்ளார். ஆங்கில நாவல் ஒன்றைத் தழுவி உருவாக்கப்பட்டுள்ளது. இந்தப் படத்துக்கு ஹாலிவுட், போலிவுட் ஆகிய இரு திரைத்தளங்களிலும் நிச்சயம் நல்ல வரவேற்பு கிடைக்கும் எனப் படக்குழுவினர் நம்புகின்றனர். இப்படம் இந்தியா, சிங்கப்பூர், மலேசியா, நேப்பாளம், அமெரிக்கா, கனடா உள்ளிட்ட நாடுகளில் நாளை வெளியாகும். வசூல் ரீதியில் இப்படம் சாதிக்க வேண்டும் என விரும்புகிறாராம் தனுஷ்.