சமூக வலைத்தளத்தில் உரையாடிய போது தன்னை கிண்டல் செய்த ரசிகருக்கு சரியான பதிலடி கொடுத்துள்ளார் ரித்விகா.
'பிக்பாஸ்' நிகழ்ச்சி மூலம் பிரபலமடைந்த இவர் அண்மையில் தனது ரசிகர்களுடன் இணையம் வழி உரையாடினார்.
அப்போது கோடை காலத்தில் மட்டுமல்லாமல் இதர சமயங்களிலும் அதிகளவு தண்ணீர் பருகினால் உடல்நலத்துக்கு நல்லது எனக் குறிப்பிட்டார் ரித்விகா.
இதற்குப் பதிலளித்த ரசிகர் ஒருவர், "எந்தத் தண்ணியைக் குறிப்பிடுகிறீர்கள்?" என்று கேட்க ரித்விகாவுக்கு கடும் எரிச்சலாம்.
அதற்குள் மற்றொரு ரசிகரோ, "நீங்கள் பார்க்க நன்றாகவே இல்லை," என்று குறிப்பிட, பதிலுக்குப் பொங்கி எழுந்த ரித்விகாவும், "அப்படியா மகிழ்ச்சி... நீங்களும் பார்ப்பதற்கு நன்றாகவே இல்லை," என்று திருப்பி பதிலடி கொடுத்திருக்கிறார்.

