அடிதடி தொடரில் ஷ்ருதி

அமெரிக்கா உள்ளிட்ட மேலை நாடுகளில் தொலைக்காட்சித் தொடர்களும், இணையத் தொடர்களும் மிகவும் பிரபலமானவை. அதுபோன்ற தொடர் ஒன்றில் நடிப்பதற்கு ஸ்ருதிக்கு வாய்ப்புக் கிடைத்துள்ளது.

ஆண்டுக் கணக்கில் நீடிக்கும் ஒரே ஒரு தொடரில் நடித்தாலும் போதும், கைநிறைய காசு பார்த்துவிடலாம்.

அமெரிக்காவில் உருவாகும் ‘டிரெட்ஸ்டோன்’ என்ற தொலைக்காட்சித் தொடரில் ஒப்பந்தமாகி உள்ளாராம்.

இது அடிதடியும் திகிலும் நிறைந்த கதையுடன் உருவாகும் தொடர். அமெரிக்க உளவு அமைப்பான சிஐஏ கண் காணிப்பின் கீழ் செயல்படுத்தப்படும் ‘பிளாக் ஆபரேஷன்’ எனும் திட்டத்தை மையப்படுத்தி விறுவிறுப்பான கதைக் களத்தை அமைத்துள்ளனர்.

இந்தத் திட்டத்துக்காக தேர்வு செய்யப் படுபவர்கள் அசாதாரணமான வீரர்களாக உருவாகிறார்கள். இப்படிப்பட்ட குழுவில் ஷ்ருதியும் இணைகிறார். ஆனால் தன்னைப் பற்றிய விவரம் ஏதும் வெளியே கசிந்துவிடக் கூடாது என்பதால் டெல்லியில் அமைதியாக வாழ்வது போல் நடிக்கிறார்.

“கதைப்படி எனது பெயர் நீரா படேல். டெல்லி உணவகம் ஒன்றில் வாடிக்கையாளர்களுக்கு உணவு பரிமாறும் சாதாரணப் பெண்ணாக வலம் வருவேன். அண்மையில்தான் ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டேன். அதற்கு முன்பு நடிப்புத் தேர்வு நடத்தப்பட்டது. அதன் பிறகே தேர்வானேன். அவர்களுடைய தேர்வு முறை எனக்கு மிகவும் பிடித்திருக்கிறது.

“அமெரிக்காவில் எனக்காகச் செயல்படும் முகவர்கள் மிகுந்த திறமைசாலிகள். எனக்கேற்ற வாய்ப்புகளையும் கதாபாத்திரங்களையும் அழகாகத் தேடிப்பிடிக்கிறார்கள்,” என்று உற்சாகத்துடன் விவரிக்கிறார் ஷ்ருதி.

மிக விரைவில் இத்தொடருக்கான படப்பிடிப்பு துவங்க உள்ளதாம். உலகம் முழுவதும் பல்வேறு பகுதிகளில் காட்சிகளைப் படமாக்க உள்ளனர்.

ஜெர்மி இர்வின், பிரையன் ஜே.ஸ்மித், ஓமார் மெட்வாலி உள்ளிட்ட பலர் நடிக்கும் இந்தத் தொடரை டிம் கிரிங் இயக்குகிறார். ஜூலை முதல் வாரம் புடாபெஸ்ட் நகரில் படப்பிடிப்பு துவங்குகிறது.

“கொடூரத் தாக்கு தல்களை நடத்தக்கூடிய, தயவு காட்டாமல் எதிரி களை வீழ்த்தக் கூடிய கதாபாத்திரம் என்பதால், அதற்கேற்ப என்னை தயார்ப்படுத்திக் கொள்ள வேண்டும் என இயக்குநர் கூறியுள்ளார். சண்டைக் காட்சிகளில் பங்கேற்பதற்கான பயிற்சியை முன்பே தொடங்கி விட்டேன்.

“இத்தொடர் முழுவதும் அடிதடி, பழி வாங்குதல், வஞ்சம் தீர்ப்பது என விறு விறுப்பான கதையோட்டம் காணப்படும். பொதுவாக உடலை வறுத்திக் கொண்டு நடிக்கும் சண்டைக் காட்சிகள் எனக்கு மிகவும் பிடிக்கும். அவற்றில் பிறர் உதவியின்றி நடிக்க விரும்புவேன்.

எனவே இந்தத் தொடர் முழுவதும் எனது தனிப்பட்ட விருப்பத்தை நிறைவேற்றிக் கொள்ள நிறைய வாய்ப்பு இருக்கிறது. எல்லாருக்கும் இப்படிப்பட்ட வாய்ப்பு கிடைத்துவிடாது,” என்று குழந்தைத் துள்ள­லுடன் பேசுகிறார் ஷ்ருதி.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!