விஜய் தொலைக்காட்சி ஒளிவழியில் இடம்பெறும் பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூன்றாம் பருவத்தில் பிரபல மலேசிய பாடகர் ஒருவர் இடம்பெறுவதாகத் தகவல் வெளிவந்துள்ளது. முகென் ராவ் என்ற அந்தக் கலைஞர் நிகழ்ச்சிக்கான தெரிவுச்சுற்றுகளைக் கடந்து, சில நாட்களில் தொடங்கவுள்ள அந்நிகழ்ச்சியில் பங்கேற உறுதி செய்யப்பட்டுள்ளார்.
மலேசியாவில் பல விசிறிகளைக் கொண்ட முகெனுக்குச் சிறந்த தொலைக்காட்சி நாடகக் கலைஞர் விருது கொடுக்கப்பட்டதாக 'வர்ணம்' மலேசிய இணையத்தளம் குறிப்பிடுகிறது.
முதலாம் பருவத்தில் ஆரவ், இரண்டாவது பருவத்தில் மகத் போன்ற ஆண் அழகர்கள் தங்களுக்குரிய விதத்தில் இந்த நிகழ்ச்சிக்குச் சலசலப்பு சேர்த்து அதனை மேலும் பிரபலப்படுத்தியுள்ளனர். ஒருவிதத்தில் மலேசியாவைப் பிரதிநிதித்துச் செல்லும் முகென் என்ன செய்யப்போகிறார் என்ற ஆர்வம் அனைத்துலக ரசிகர்களுக்கிடையே மேலோங்கி இருக்கிறது. இதன் முலம் அவர் நல்ல விதமான பிரபலத்தைப் பெற்றால் அவருக்கான தமிழகத் திரைத்துறை வாய்ப்புகள் மேலும் விரிவடையலாம்...

