'ஸ்கை டைவிங்' பயிற்சியின்போது சர்வானந்துக்கு எலும்பு முறிவு

'ஸ்கை டைவிங்' பயிற்சியின்போது சர்வானந்துக்கு எலும்பு முறிவு

1 mins read
218d4b2c-bd2d-4c47-bf89-8790d0e5e62d
-

பிரபல தெலுங்கு நடிகர் சர்வானந்த். 'எங்கேயும் எப்போதும்' படத்தின் மூலம் தமிழுக்கு அறிமுகமானார். இவர் '96' படத்தின் தெலுங்கு மறுபதிப்பில் விஜய் சேதுபதி நடித்த வேடத்தில் நடித்து வருகிறார். இந்நிலையில் மற்றொரு படத்திற்காக 'ஸ்கை டைவிங்' செய்யும்போது விபத்து ஏற்பட்டு, சர்வானந்தின் தோள், கை, கால் ஆகியவற்றில் எலும்பு முறிவு ஏற்பட்டு தற்பொழுது மருத்துவமனையில் சிகிச்சை எடுத்துக்கொண்டு வருகிறார்.