சமந்தா: சமூக வலைத்தளங்களால் எங்களுக்குப் பிரச்சினைதான்

சமந்தா: சமூக வலைத்தளங்களால் எங்களுக்குப் பிரச்சினைதான்

3 mins read
9bf04798-9fa3-436e-8e81-c2b6133efc89
-

காலை எழுந்தவுடன் முதல் வேலையாக சமூக வலைத்தளங்களைப் பார்ப்பேன். என்னைப் பற்றி அவதூறாகப் பதிவிட்டு இருந்தால் மிகவும் கவலையாக இருக்கும் என்று வருத்தத்துடன் கூறியிருக்கிறார் சமந்தா.

சமூக வலைத்தளங்களை அதிகம் பயன்படுத்துவது திரைப் பிரபலங்கள் தான். நடிகர்களை விட நடிகைகளுக்குத் தான் வலைத்தளங்களில் பின்பற்றுபவர் கள் அதிகம் இருக்கிறார்கள்.

நடிகைகள் பெரும்பாலும் அவர்களது அழகிய புகைப்படங்களைத்தான் சமூக வலைத்தளங்களில் அதிகம் வெளியிடு வார்கள். சில சமயங்களில் கவர்ச்சி யான புகைப்படங்களும் அதில் இடம் பெறும். கவர்ச்சிப் படங்களை வெளியிட்ட தற்காக நடிகைகளை சமூக வலைத் தளங்களில் கிண்டல் செய்வார்கள்.

அந்த கிண்டலிலிருந்து நடிகை சமந்தாவும் தப்பிப்பதில்லை. திருமண மான பின் எதற்காக இப்படி கவர்ச்சியான புகைப்படங்களை வெளியிடுகிறீர்கள் என்று பலரும் அவரைக் கேள்வி கேட்டுள் ளார்கள். இப்படிப்பட்ட கேள்விகள் குறித்து சமந்தா அண்மையில் அளித்த பேட்டி ஒன்றில் அவருடைய கருத்தைத் தெரிவித்துள்ளார்.

"காலை எழுந்ததும் சமூக வலைத் தளங்களைப் பார்ப்பேன். காலையில் நல்ல மாதிரியாக பதிவிட்டு இருந்தால் அன்று முழுவதும் மகிழ்ச்சியாக இருப்பேன். சில சமயம் திட்டி பதிவிட்டு இருப்பார்கள். அதனால் நிஜமாகவே மனம் மிகவும் கவலையாகிவிடும். அது என்னுடைய மன வலிமையை சிதைக் கிறது. பைத்தியம் பிடிக்க வைக்கிறது. அதனால் தவறான சில முடிவுகளை எடுக்கவும் தள்ளப்படுகிறேன்," என தெரிவித்துள்ளார்.

இவருடைய நடிப்பில் தெலுங்கில் வெளியான 'மஜிலி' படம் நல்ல வசூலைத் தந்து மிகப் பெரிய வெற்றியைப் பெற்றது. அதைத் தொடர்ந்து சமந்தாவை முன்னிலைப்படுத்திய 'ஓ பேபி' படமும் விரைவில் வெளியாகவுள்ளது.

அண்மையில் இதன் முன்னோட்டக் காட்சி வெளியாகியிருந்த நிலையில் இப்படத்தின் தடையையும் மீறி சமந்தா விற்கு குரல் கொடுத்திருந்தார் சின்மயி. அதைக் குறிவைத்து நெட்டிசன் ஒருவர், "சின்மயியால் இந்த படம் ஓடாது," என்று பதிவிட்டிருந்தார். அதற்கு சமந்தா, "உலகமே இந்த முட்டாளைப் பாருங்கள்," என்று கோபமாகப் பதிவிட்டு இருந்தார். இதற்கு சின்மயியும் தனது ஆதரவுக் கரத்தினை நீட்டியுள்ளார்.

"இதுபோல் பலரும் பலவிதமாக தங்கள் கருத்து களை வலைத்தளங்களில் பதிவிட்டுக்கொண்டு தான் இருக்கிறார்கள். இவை அனைத்தையும் சமாளிக்கவேண்டிய நிர்ப்பந்தத்தில் இருக்கிறோம்," என்றார் சமந்தா.

இந்நிலையில் சமந்தா நடிப்பில் தயாராகியுள்ள 'ஓ பேபி' படத்தின் முன்னோட்டக் காட்சி வெளியாகி ரசிகர்களைக் கவர்ந்துள்ளது.

படத்தைப் பற்றி சமந்தா கூறுகையில், "ஓ பேபி' ஒரு வயதான பெண்ணைப் பற்றிய கதையில்தான் உருவாகியிருக்கிறது. ஆனால் அவரைச் சுற்றி பல ஆண் கதாபாத்திரங்களும் முக்கியத்துவம் பெற்றுள்ளனர்.

"அந்த வகையில் குடும்பத்தில் உள்ள அனைத்து கதாபாத்திரங்களும் இந்த படத்தில் இடம் பெற்றிருக்கின்றனர். இது ஆண் - பெண் அனைவருக்கு மான படம்தான். அதனால் 'ஓ பேபி' பெண்களுக்கான படம் என்று யாரும் கருதவேண்டாம்," என்று கூறியுள்ளார்.

வயதான பாட்டி படம் பிடிக்கச் சென்றபோது அவருக்கு இளமை திரும்பி பின்னர் என்ன நடந்தது என்பதுதான் படத்தின் கதை. நடிகை சமந்தா இளமையான தோற்றத்திலும் வயதான தோற்றத்தில் நடிகை லட்சுமியும் நடித்திருக்கிறார்கள். இவர்களோடு தெலுங்கு நடிகர் நாக சவுரியாவும் நடித்துள்ளார். இவர் 'கரு' படத்தில் சாய் பல்லவியுடன் நடித்தவர்.

பாட்டியாக நடித்துள்ள சமந்தாவிடம் சில இளைஞர் கள் தங்களது காதலைச் சொல்ல வர, அதற்கு "நான் உனக்கு பாட்டிடா," என்று சொல்வது போன்ற வசனம் முன்னோட்டக் காட்சியில் இடம் பெற்றிருக்கிறது. அதைப் பலரும் விரும்பிப் பார்த்து வருகின்றனர்.

கடந்த 2014ஆம் ஆண்டு வெளியான கொரியன் படமான 'மிஸ் க்ரானி' படத்தின் மறுதயாரிப்புதான் 'ஓ பேபி'.

'மிஸ் க்ரானி' படம்

ஏற்கெனவே சீனா, ஜப்பான், தாய்லாந்து, இந்தோனீசியா உள்ளிட்ட பல மொழிகளில் மறுதயாரிப்பு செய்யப்பட்டு வெற்றி பெற்றுள்ளது.

2019-06-22 06:20:00 +0800