சிவகார்த்திகேயனின் 'எங்க வீட்டுப் பிள்ளை'

1 mins read
05f96d60-679d-4dcb-99ab-4cdbf1dac920
-

சிவகார்த்திகேயன் நடிப்பில் தயாராகி வரும் புதிய படத்தை 'கடைக்குட்டிச் சிங்கம்' திரைப்படத்தை இயக்கிய பாண்டிராஜ் இயக்குகிறார். இந்தப் படத்துக்கு 'எங்க வீட்டுப் பிள்ளை' எனப் பெயர் வைக்கப்பட உள்ளதாகக் கூறப்படுகிறது. 'எங்க வீட்டுப் பிள்ளை' படத்தின் தலைப்பு உரிமை விஜயா புரெடக்‌‌ஷன் நிறுவனத்திடம் உள்ளது.

இதன் காரணமாக 'எங்க வீட்டுப் பிள்ளை' தலைப்பைப் படத்துக்கு வைக்க அனுமதி கேட்டுப் படக்குழுவினர் விஜயா புரெடக்‌‌ஷன் நிறுவனத்தை அணுகியுள்ளதாகத் தகவல்கள் கிடைத்துள்ளன. பாரதிராஜா, ஐஸ்வர்யா ராஜேஷ், யோகி பாபு, சூரி, சமுத்திரக்கனி, அனு இம்மானுவேல், நடராஜ், ஆர்.கே.சுரேஷ் எனப் பல முன்னணி நடிகர்கள் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்து வருகின்றனர்.