டாப்சி: அந்தத் தகவலில் சிறிதும் உண்மை இல்லை

டாப்சி: அந்தத் தகவலில் சிறிதும் உண்மை இல்லை

3 mins read
7f781f2b-f5e3-4b11-ae92-879be0ec0378
-

அஜித் ரசிகர்கள் தன் மீது கோபமாக இருப்பதாக வெளியான தகவல் மிகுந்த வருத்தம் அளிப்பதாகக் கூறுகிறார் நடிகை டாப்சி. அந்தத் தகவலில் சிறிதளவும் உண்மை இல்லையாம்.

தன்னைப் பற்றி இப்படிப் பல்வேறு தவறான தகவல்கள் பரவுவதாகவும் வருத்தப்படுகிறார். என்ன விஷயம்? ஏன் இந்த வருத்தம்?

இந்தியில் வெளியாகி வெற்றி பெற்ற 'பிங்க்' படம் பெரியளவில் வெற்றி பெற்றது. இதையடுத்து காலஞ்சென்ற நடிகை ஸ்ரீதேவியின் கணவர் போனி கபூர் இப்படத்தை தமிழில் மறுபதிப்பு செய்கிறார்.

அதில் அஜித் நாயகனாக நடித்து வருகிறார். இப்படத்தின் இந்தி பதிப்பில் நடித்த டாப்சி தமிழிலும் நடிப்பார் என எதிர்பார்க்கப்பட்டது.

ஆனால் அவர் நடிக்க மறுத்து விட்டதாகத் தகவல் வெளியானது. இதுதான் அஜித் ரசிகர்கள் எரிச்சல டைய காரணம்.

இந்நிலையில் இதுகுறித்து டாப்சி விளக்கம் அளித்துள்ளார்.

"இந்தியில் வெளியான 'பிங்க்' படம், என் சினிமா வாழ்க்கையில் மிக முக்கியமான படம். அது தமிழில் மறு பதிப்பாவது குறித்து கேள்விப்பட்டதும் முதலில் மகிழ்ச்சி அடைந்தது நான் தான்.

"ஆனால் அந்தப் படத்தில் நான் நடிக்கவேண்டும் என்று கேட்டு யாரும் என்னை அணுகவில்லை. நானும் வலிய சென்று 'நான் நடிக்கட்டுமா?' என்று தேடிச் சென்று வாய்ப்பு கேட்கவில்லை. அப்படி கேட்டு நடிக்கும் பழக்கமும் எனக்கு கிடையாது. எனவே அஜித் ரசிகர்கள் உண்மையைத் தெரிந்து கொள்ளவேண்டும்," என்கிறார் டாப்சி.

'கேம் ஓவர்' படத்தில் மிகவும் சிரமப்பட்டு நடித்ததாக குறிப்பிடுபவர், அந்த உழைப்புக்குரிய பலனும் பாராட்டும் கிடைத்ததில் மகிழ்ச்சியின் அளவும் அதிகரித்ததாகச் சொல்கிறார்.

இந்தியத் திரையுலகில் கதாநாயகர் களுக்கு அதிக சம்பளம் கொடுக்கும் தயாரிப்பாளர்கள், நடிகைகளுக்கு மட்டும் குறைவாகத் தருவது வழக்கமான நடைமுறைதான் என்று பக்குவமாகப் பேசும் டாப்சி, சில ஆண்டுகளுக்குப் பிறகு நாயகிகளுக்கும் முக்கியத்துவம் கிடைக்கும் என நம்புகிறாராம்.

"சினிமா என்பது நிறைய லாபம் பார்க்கும் ஒரு தொழில். அதில் எதைச் செய்தால் லாபம் கிடைக்குமோ, அதைத்தான் ஒரு தயாரிப்பாளர் செய்வார்.

"நாயகர்களுக்கு ரசிகர் கூட்டம் உள்ளது. அவர்களின் நடிப்பால் படமும் சுலபத்தில் வியாபாரம் ஆகிறது. ஆனால் நாயகிகளுக்கு அப்படி இல்லை.

"ஹாலிவுட்டில் நாயகிகளுக்கு வாய்ப்பு இருக்கிறது. இன்னும் சில ஆண்டுகளுக்குப் பிறகு, இந்திய சினிமாவிலும் அப்படியொரு சூழ்நிலை வரலாம். அந்தச் சமயத்தில் எங்களுடைய சம்பளமும் உயரும்," என்கிறார்.

இவர் வீட்டு மனைகளை வாங்கி, விற்கும் தொழிலிலும் ஈடுபட்டிருப்பதாக வெளியான தகவலும் உண்மை அல்லவாம். சினிமாவில் போதுமான வருமானம் கிடைக்கும் நிலையில் வேறு தொழில் செய்ய வேண்டிய அவசியம் எழவில்லை என்கிறார்.

"டெல்லியில் எனக்கு ஏற்கெனவே வீடு உள்ளது. எனினும் மும்பையில் அதிக நாட்கள் தங்குவதால் அங்கும் புது வீடு வாங்கியுள்ளேன். வீட்டுக்கு அருகிலேயே அலுவலகத்துக்கு இடம் பார்த்ததை வைத்து வதந்தி கிளப்பியுள்ளனர்," என்கிறார் டாப்சி.

தற்போது, 'சான்ட் கி ஆங்' என்ற இந்திப் படத்தில் நடிப்பவர், அதில் துப்பாக்கி சுடும் பெண் வேடத்தை ஏற்றுள்ளார்.

"82 வயதில் துப்பாக்கி சுடும் போட்டியில் பங்கேற்ற சாதனைப் பெண்மணியான பிரகாஷ் டோமர் கதாபாத்திரத்தில் நடிப்பது உற்சாகம் அளிக்கிறது.

இது நிச்சயம் எனக்கு வித்தியாசமான அனுபவத்தை தரும் என நம்புகிறேன். இதில் என் சகோதரியாக பூமிகா நடிக்கிறார்," என்று சொல்பவருக்கு வாழ்க்கை வரலாற்றுப் படங்களில் நடிக்க வேண்டும் என்று ஆசையாம்.

குறிப்பாக மறைந்த பிரதமர் இந்திரா காந்தி தொடர்பான படத்தில் நடிக்க வேண்டும் என்கிறார். அதேசமயம் இந் திரா காந்தியின் வாழ்க்கை ஒரே ஒரு படத்துக்குள் சுருக்கிவிடாமல் நான்கு பாகங்களாக எடுக்க வேண்டும் என்றும் சொல்கிறார்.

"வாழ்க்கையில் அடுத்த கட்டத்துக்கு நகர்ந்து போகும்போது ஏற்படும் மாற்றங்கள் இயல்பானது மட்டுமில்லை, தவிர்க்க முடியாததும்தான். இதை நான் மனதார ஏற்கிறேன்," என்று தத்துவார்த் தமாகப் பேசுகிறார் டாப்சி.