பிக்பாஸ் 3 நிகழ்ச்சியின் பங்கேற்பாளர்கள்; ஏழு ஆண்கள், எட்டு பெண்கள்

‘பிக்பாஸ் 3’ நிகழ்ச்சியில் பங்கேற்போரின் பெயர்கள் உறுதி செய்யப்பட்டுள்ளன. இந்நிகழ்ச்சியில் கலந்துகொள்ளும் 15 நட்சத்திரப் பங்கேற்பாளர்களில் எழுவர் ஆடவர்கள் என்றும் எட்டு பேர் பெண்கள் என்றும் தகவல்கள் வெளிவந்துள்ளன.

நேற்று தொடங்கிய அந்நிகழ்ச்சியின் நெறியாளர் கமல்ஹாசன், போட்டியாளர்களை அறிமுகம் செய்துள்ளனர். செய்தி வாசிப்பாளர் பாத்திமா பாபு, மாடல் அழகி லாஸ்லியா, நடிகை சாக்ஷி அகர்வால், நடிகை மதுமிதா, சின்னத்திரை நடிகர் கவின், நடனக்கலைஞர் அபிராமி, நடிகர் சரவணன், நடிகை வனிதா விஜயகுமார்,  இயக்குநர் சேரன்,  நடிகை ஜெரின், கர்நாடக இசைக்கலைஞர் மோகன் வைத்யா, இலங்கையைச் சேர்ந்த பிரபலம் தர்ஷன், மலேசியாவைச் சேர்ந்த முகென் ராவ், நடன அமைப்பாளர் சாண்டி, நடிகை ரேஷ்மா ஆகியோர் போட்டியில் கலந்துகொள்ளும் 15 பேர்.