பிக்பாஸ் வீட்டிலிருந்து அப்புறப்படுத்தப்பட்ட ரஜினி

பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூன்றாவது பருவம் நேற்று தொடங்கியது. நிகழ்ச்சியின் பங்கேற்பாளர்கள் யார் என்பதும் நேற்றைய நிகழ்ச்சியில் உறுதி செய்யப்பட்டுள்ளது.  நிகழ்ச்சிக்காகப் பயன்படுத்தப்படும் பிக்பாஸ் வீட்டுக்குள் தமிழர்களின் பிரபல கலாசாரத்தைப் பிரதிபலிக்கும் ஓவியங்களும் அலங்காரப்பொருட்களும்  இடம்பெறுவது வழக்கம்.

நிகழ்ச்சித் தொடங்குவதற்கு முன்னர் பிக்பாஸ் வீட்டுக்குப் பத்திரிக்கையாளர்கள் சென்றிருந்தபோது அங்கு ரஜினியின் படம் காணப்பட்டது. ஆனால் நிகழ்ச்சியின் தொடக்கத்தில் அந்தப் படத்தைத் திடீரெனக் காணவில்லை.

தமிழகத்தில் மட்டுமின்றி உலகெங்கிலும் பிக்பாஸ் நிகழ்ச்சி குறிப்பிடத்தக்க வரவேற்பைப் பெற்றுள்ளது. இம்முறை முகென் ராவ் என்ற மலேசியக் கலைஞரும் பங்கேற்கிறார்.