ஒன்று போனது; மற்றொன்று வந்தது

ஒன்று போனது; மற்றொன்று வந்தது

1 mins read
9bc27d34-7ca9-4f73-bcaa-24c44bb615da
வாணி போஜன் -

சின்னத்திரையில் பிரபலமாக உள்ள வாணி போஜன் தமிழில் அறிமுகமாக இருந்த முதல் திரைப்படத்தில் இருந்து விலகிவிட்டதாகத் தகவல் வெளியாகி உள்ளது.

பல்வேறு தொலைக்காட்சி தொடர்களில் குடும்பப்பாங்கான கதாபாத்திரங்களில் நடித்துப் பெயரெடுத்தவர் வாணி.

தமிழ்ச் சினிமாவில் நடிக்க கேட்டு பல வாய்ப்புகள் தேடி வந்தபோதும் அவற்றை ஏற்க மறுத்து வந்தார். இந்நிலையில் லோகேஷ் இயக்கும் 'எண் 4' என்ற தலைப்பில் உருவாகும் படத்தில் நடிக்க சம்மதித்திருந்தார் வாணி.

இது சென்னை காசிமேடு பகுதியைக் கதைக்களமாகக் கொண்டு உருவாகும் திகில் படம். படத்தின் கதையைக் கேட்டதும் வாணிக்கு மிகவும் பிடித்துப் போனதாம். இதனால் நடிக்க சம்மதித்துள்ளார்.

ஆனால் இவர் கொடுத்த கால்‌ஷீட்டின்படி, பட வேலைகளைத் துவக்க முடியாமல் போனது. இதையடுத்து வேறு வழியின்றி இப் படத்திலிருந்து விலகுவதாக அறிவித்துள்ளார் வாணி. இதனால் வாணி போஜன் வருத்தப்படவில்லை. ஏனெனில் வைபவ் நடிக்கும் புதிய படத்தில் நாயகியாக ஒப்பந்தமாகி உள்ளாராம்.