நடிகை ரிச்சா கங்கோபாத்யாய் என்னவானார்? என்று யோசிப்பவர்கள் யாரேனும் இருந்தால் அவர்களுக்கு இந்தச் செய்தி உதவும்.
வேறொன்றுமில்லை. அவரது வீட்டில் விரை வில் கெட்டிமேளச் சத் தம் கேட்க இருக்கிறது.
சிம்புவுடன் 'ஒஸ்தி', தனுஷுடன் 'மயக்க மென்ன' உள்ளிட்ட தமிழ்ப் படங்களில் நடித்த வர் ரிச்சா.
யதார்த்தமாக நடிக்கக்கூடியவர் என்பதால் கோடம் பாக்கத்தில் வெற்றி வலம் வருவார் என எதிர்பார்க்கப் பட்டது.
ஆனால், அதிர்ஷ்டம் அவ ருக்குக் கை கொடுக்க வில்லை. உரிய வாய்ப்புகள் கிடைக்கா ததால் சினிமாவிலிருந்து விலகினார் ரிச்சா.
பிறகு அவர் சொந்தமாக தொழில் தொடங்கி இருப்பதாக கூறப்பட்டது. இந்நிலையில் வெளிநாட்டைச் சேர்ந்த ஜோ லிக்கல்லோ என்பவரை இவர் காதலிப்பதாகவும் தகவல் வெளி யானது.
தொடக்கத்தில் காதல் குறித்து ஏதும் பேசாத அவர், சில மாதங்களுக்கு முன்பு அதுகுறித்து வெளிப்படையாக அறிவித்தார். அதன் பின்னர் காதலர் ஜோவுடன் இவருக்குத் திருமண நிச்சயதார்த்தம் நடைபெற்றது.
இந்நிலையில் திடீர் திருப்பமாக மீண்டும் தமிழ்ப் படங்களில் நடிக்க சில வாய்ப்புகள் தேடி வந்ததாம். ஆனால் ரிச்சா மீண்டும் நடிக்க விரும்பவில்லை என்று திட்டவட்ட மாக மறுத்துவிட்டாராம்.
இந்நிலையில் திருமணத்துக்குத் தயாராகி வருவதாக அவர் அறி வித்துள்ளார்.
"நானும் ஜோவும் கடந்த 2 ஆண் டுகளாகக் காதலித்து வருகிறோம். இந்நிலையில் திருமணம் செய்து கொள்ளலாம் என்று இருவரும் முடி வெடுத்துள்ளோம். விரைவில் என் காதலரைக் கைபிடிப்பேன்," என்று ரிச்சா கூறியதாக தமிழக ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது.

