ரகுலின் தோழியான பிரியா வாரியர்

தமிழ்ப் படங்களில் நடிக்க வேண்டும் என விரும்பினாலும் உரிய வாய்ப்புகள் கிடைக்கவில்லை எனப் புலம்புகிறாராம் பிரியா வாரியர்.

எனினும் தெலுங்கில் சில வாய்ப்புகள் கிடைப்பதால் ஆறுதல் அடைந்துள்ளார். தற்போது நிதின் நாயகனாக நடிக்கும் தெலுங்குப் படத்தில் இவர்தான் நாயகியாம். மற்றொரு நாயகியாக ரகுல் பிரீத் சிங் ஒப்பந்தமாகி உள்ளார். 

இதனால் அவருக்குக் கூடுதல் முக்கியத்துவம் கிடைக்குமோ என்று யோசித்துக் கவலையில் மூழ்கியுள்ளா ராம் பிரியா. ஆனால் இவரும் படத்தில் இருப்பதை அறிந்த ரகுல் பிரீத்சிங் கொஞ்சமும் அலட்டிக் கொள்ளாமல் தொலைபேசி வழி தொடர்புகொண்டு பிரியாவுடன் பேசியிருக்கிறார்.

இவ்வளவு வெளிப்படையாக நட்பு பாராட்டியதும் நெகிழ்ந்து போன பிரியா இப்போது ரகுலின் நெருக்கமான தோழியாக மாறிவிட்டார்.