‘பேட்ட போஸ்’ கொடுக்கும் ரஜினி பேரன்

நடிகர் ரஜினிகாந்தின் மகள் சவுந்தர்யா, தன் நான்கு வயது மகன் வேத்தின் படம் ஒன்றை ‘இன்ஸ்டகிராம்’ தளத்தில் பதிவேற்றியுள்ளார். ‘பேட்ட’ படச் சுவரொட்டியில் ரஜினிகாந்த் நிற்பதைப் போல் வேத் சன்னலைப் பார்த்தவாறு கம்பீரமாக நிற்பதை அந்தப் படம் காட்டுகிறது. தாத்தாவைப் போலவே பேரன் இருக்கிறானே என்று சவுந்தர்யா மகிழ்ச்சியுடன் அந்தப் பதிவில் குறிப்பிட்டார்.

அந்த இன்ஸ்டகிராம் பதிவில் ரசிகர்கள் பலர் தங்கள் பாராட்டை வெளிப்படுத்தினர். சவுந்தரியாவுக்கும் அவரது முதல் கணவர் ஆர் அஷ்வினுக்கும் பிறந்த மகன் வேத். பிப்ரவரி மாதத்தில் சவுந்தர்யா தொழிலதிபர் விசாகனை மறுமணம் செய்தார். தனது குடும்ப வாழ்க்கையைப் பற்றி சவுந்தர்யா அடிக்கடி சமூக ஊடகங்களில் பதிவு செய்வது வழக்கம்.